“இது ஸ்பெஷல் சவாரி” – சனம் ஷெட்டி
தென்னிந்திய அழகிப் போட்டி 2016 இல் இரண்டாம் இடத்துக்கு வந்த நடிகை சனம் ஷெட்டி, தான் நடித்திருக்கும் சவாரி படம் மிக நன்றாக வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
படம் பற்றி உற்சாகத்தோடு பேசும்போது, "சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம். இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று நான் சொல்வேன். மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
இயக்குநர் குகனும் ஒளிப்பதிவாளர் செழியனும் சிறப்பாகப் பணியாற்றி, குறைந்த காலகட்டத்தில் மினிமம் பட்ஜெட்டில் மிக சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்
படத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன். கதைப்படி கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமணத் தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும். பல எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் நிகழும்.
எங்களது ...