Shadow

Tag: Seyal vimarsanam

செயல் விமர்சனம்

செயல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மார்க்கெட் தண்டபாணி எனும் ரெளடியை, யாரெனத் தெரியாமல் மார்க்கெட்டில் வைத்துச் செமயாக அடித்து விடுகிறான் கார்த்திக். அந்த வீடியோ வைரலாகி தண்டபாணியின் மானம் ஆன்லைன் ஏறிவிடுகிறது. இழந்த தன் கெளரவத்தை மீட்க கார்த்திக்கை மார்க்கெட்டில் வைத்துக் கொல்லத் திட்டமிடுகிறான் தண்டபாணி. அவனது திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கார்த்திக்காக ராஜன் தேஜேஸ்வர் எனும் அறிமுக நாயகன் நடித்துள்ளார். நடிப்பும் நடனமும் கை கூடியிருந்தாலும், அவரது தமிழ் உச்சரிப்பு ஓர் அந்நியத்தன்மையைத் தருகிறது. அதுவும் கதைப்படி அவர் வடச்சென்னைவாசி எனும் போது, அவரது பேச்சு குழந்தைத்தனமாக ஒலிக்கிறது. அவரது அம்மா லக்‌ஷ்மியாக வரும் ரேணுகோவோ தனது வழக்கமான பாணியில் பேசியே தன் இருப்பை அழுத்தமாகப் பதிகிறார். இது முழுநீள ஆக்‌ஷன் படமன்று. ஒரு கட்டத்திற்கு மேல், மார்க்கெட் தண்டபாணி முனீஷ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியோட...