Shadow

Tag: Shruti Haasan Silambam Practice

சிலம்பப் பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

சிலம்பப் பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

இது புதிது, சினிமா, திரைத் துளி
உடற்தகுதியை நேர்த்தியாகப் பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும், தற்காப்புக் கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான (மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இப்பயிற்சி இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்புக் கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.  இது தொடர்பாக அவர் குறிப்பிடும்போது, ''எனது தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்...