சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்
சித்தார்த் ட்ராஃபிக் போலீஸாக நடிக்கிறார் என்பதால், சிக்னல் கம்பத்தில் ஒளிரும் மூன்று வண்ணங்களை, நில், கவனி, செல் என்ற நேரடி குறியீட்டுத் தலைப்பாகக் கொள்ளலாம். உட்பொருளாக, மாமன் மச்சானுக்குள்ளான மோதலைச் சிவப்பாகவும், சமாதானம் ஆவதை மங்கலக்கரத்தைக் குறிக்கும் மஞ்சளாகவும், ஒன்று சேருவதைச் செழுமையின் நிறமான பச்சையோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
படத்தின் முதற்பாதி அசரடிக்கிறது. காரணம் குழந்தைகள். பெற்றோரை இழந்த ஒரு பள்ளிச் சிறுவன் தன் அக்காவின் வகுப்புக்குச் சென்று, அக்காவின் வகுப்பு ஆசிரியையிடம், 'பூனைக்கு நான் தான் அப்பா, அவ தான் எனக்கு அம்மா. இனி நான் தான் அவள் ரேங்க் கார்டில் சைன் போடுவேன்' எனச் சொல்லும் பொழுதே பார்வையாளர்கள் க்ளீன் போல்ட். ஒரே ஒரு காட்சியின் மூலம் முழுப் படத்துக்கும் ஜீவன் கொடுத்துவிடுகிறார் இயக்குநர் சசி.
அச்சிறுவர்களின் அத்தையாக யூ-ட்யூப் நக்கலைட்ஸ் புகழ் தனம் நட...