
சிக்சர் விமர்சனம்
ஆதிக்கு மாலைக்கண் நோய் உள்ளது. மாலை ஆறு மணிக்குள் டானென வீட்டுக்குள் வந்துவிடுவார். இந்தக் குறையின் காரணமாக கல்யாணம் வேண்டாம் என மறுப்பவருக்குக் கிருத்திகாவைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. உண்மையை மறைத்து எப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
நகைச்சுவைப் படத்தில் வில்லன்களின் பாடு தான் திண்டாட்டமாய் இருக்கும். ஆர்.என்.ஆர்.மனோகரும், ஏ.ஜே.வும் அப்படியான வில்லன்கள். செம பில்டப்களுடன் அறிமுகமாகும் வில்லன்கள், அதே வேகத்தில் காமெடியன்கள் ஆகுகிறார்கள். அதே போல், கலக்கப் போவது யாரு ராமருக்கும் ஒரு கொடூரமான பில்டப். அவரும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.
ஜி.வி.பிரகாஷுடன் குப்பத்துராஜா படத்தில் பல்லக் லல்வானி, கிருத்திகா எனும் பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். நாயகனுடன் இரவில் இரண்டு, மூன்று வெளியில் சென்றும், அவரது குறையைக் கண்டுபிடிக்காத லூஸு ஹீரோயின் வேஷம் தான் வழக்க...