ஸ்மர்ஃப்ஸ் – மர்ம கிராமம்
ஸ்மர்ஃப்ஸ் படம் 2011இலும், அதன் இரண்டாம் பாகம் 2013இலும் வெளிவந்து ரசிகர்களை ஈர்த்தது. அந்த சின்னஞ்சிறு நீள நிற கதாபாத்திரங்கள், குழந்தைகளைப் பெரிதாகக் கவர்ந்தார்கள் என்பதே ஸ்மர்ஃப்ஸின் வெற்றிக்குக் காரணம். பெல்ஜியன் காமிக்ஸ் ஆர்டிஸ்ட்டான பெயோ (Peyo) உருவாக்கிய கதாபாத்திரங்களே ஸ்மர்ஃப்ஸ். காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு தான் இரண்டு படங்களும் உருவாக்கப்பட்டன.
ஏப்ரல் 21 அன்று வெளியாகும் இப்படத்தின் மூன்றாம் பாகம், ஒரு சாகச ஃபேன்டசி வகைமையைச் சேர்ந்தபடம். ஸ்மர்ஃபெட்டி, ப்ரெய்னி, க்ளம்ஸி, ஹெஃப்டி ஆகிய நண்பர்களுக்கு ஒரு ரகசிய வரைப்படம் கிடைக்கிறது. விசித்திர உயிரினங்கள் நிலவும் தடைசெய்யப்பட்ட மந்திர உலகத்திற்குச் சென்று விடுகின்றனர். அந்தச் சாகசம், ஸ்மர்ஃப்ஸின் வரலாற்றில் இஉந்து தொலைந்து போன ஒரு மர்ம கிராமத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படத்தை 60 மில்லியன் அமெரிக்க ...