Shadow

Tag: Sri Sai Shanmugar Pictures

அய்யனார் வீதி விமர்சனம்

அய்யனார் வீதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி 2 படத்தினுடைய வெளியீட்டின் பொழுது நமக்கென்ன வேலை என்று தமிழ், தெலுங்கு, ஹிந்தித் திரையுலகங்கள் வசவசவென்ற வெளியீட்டில் இருந்து சற்றே ஓய்வெடுத்துக் கொள்ள, ‘அய்யனார் வீதி’ எனும் படமெட்டும் பாகுபலியுடன் சேர்ந்து வெளியாகி, வரலாற்றில் தனக்கென்றொரு நிரந்திர இடத்தைப் பிடித்துள்ளது இப்படம். ‘நாட்டாமை’ படத்தின் கரு, ‘நட்புக்காக’ படத்தினுடைய கதையின் கரத்தைப் பற்றி ‘அய்யனார் வீதி’க்குள் திரைக்கதையாக நுழைந்துள்ளது. அய்யனார் வீதி என்பது ஊர்ப் பெயர். அய்யனாராக பொன்வண்ணனும், சுப்ரமணிய சாஸ்திரிகளாக கே.பாக்கியராஜும், செந்திலாக யுவனும் நடித்துள்ளனர். ‘படத்தில் யூத் சப்ஜெக்ட்டே இல்லையே! இளைஞர்களைக் கவர யூத் சமாச்சாரம் சேருங்க’ என பாக்யராஜ் கேட்டுக் கொண்டதால், இயக்குநர் யுவனை இணைத்துள்ளார். இப்படிப் படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் இருந்தும், திரைக்கதை எவர் மீதும் பயணிக்காமல் தன்னியல்பில் தேமோவெனச் செ...