Shadow

Tag: Steeves Corner

தென்னிந்திய ஆக்ஷன் நாயகியாகச் சன்னி லியோன்

தென்னிந்திய ஆக்ஷன் நாயகியாகச் சன்னி லியோன்

சினிமா, திரைத் துளி
சன்னி லியோனை யாரென அறியாதவரும் உண்டோ? சமீபமாக அவரது வரவால் கேரளாவின் கொச்சி நகரம் ஸ்தம்பித்தது எல்லாம் வரலாறு. அவ்வளவு புகழ் மிக்க சன்னி லியோன், நேரடித் தமிழ்ப்படமொன்றில் நடிக்கவுள்ளார். இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதைத் தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்தியக் கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். போராளிகள் தோளை உயர்த்தி டென்ஷன் ஆக வேண்டாம். ஏனெனில், சன்னி லியோன் அவரின் அடையாளமாக இருக்கும் கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற தைரியமான முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு சிறப்பம்சம் என்னெவென்றால், இது ஒரு சரித்திரப் படமும் கூட! இப்படத்திற்காகக் கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்ட...