Shadow

Tag: STR

வாலு விமர்சனம்

வாலு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருமென விளம்பரப்படுத்தப்பட்ட வாலு படம், ஆயிரம் சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக வெளி வந்தேவிட்டது. காதல் என்றாலே டார்ச்சர் என நினைக்கும் ஷார்ப்க்கு (நாயகனின் பெயர்), ப்ரியா மகாலட்சுமி மீது காதல் மலர்கிறது. முறை மாமனுடன் ப்ரியா மகாலட்சுமிக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில், ஷார்ப் எப்படி தன் காதலை வெளிப்படுத்தி ப்ரியாவை சம்மதிக்க வைக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவை, காதல், அப்பா செண்ட்டிமென்ட், தங்கச்சி செண்ட்டிமென்ட், இடையிடையே ஆக்ஷன் என கலந்து கட்டியடித்துள்ளார் சிம்பு. இயக்குநர் விஜய் சந்தரின் இந்தக் கதையை விரும்பி, சிம்பு தாமாகவே முன் வந்து இப்படத்தில் நடித்துள்ளார். ஜாலியாப் போகிறது முதற்பாதி. இரண்டாம் பாதியில், ‘நான் ஏன் இப்படிச் சொன்னேனா?’ என எதற்கெடுத்தாலும் ஒரு ஃப்ளாஷ்-கட் போட்டு, ஒவ்வொரு வசனத்துக்கும் முன் நடந்தது என்ன என்ற ரீதி...
காக்கா முட்டை விமர்சனம்

காக்கா முட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாசாங்கற்ற ஜாலியானதொரு படம். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய பிரக்ஞையையும், சம கால அபத்தங்களையும் மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது ‘காக்கா முட்டை’. இப்படம், சிறந்த குழந்தைகள் படமாக தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேலும் பல படங்களைத் தயாரிக்க நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துகள். சாக்கடையாகிவிட்ட கூவம் நதிக்கரையில் வாழும் குப்பத்துச் சிறுவர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் சகோதரர்கள். நடிகர் சிம்பு திறந்து வைக்கும் ‘பீட்சா ஹட்’டில் பீட்சா சாப்பிட வேண்டுமென அவர்களுக்கு ஆசை எழுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சின்ன காக்கா முட்டையாக ரமேஷும், பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும் அச்சு அசலாக வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சிறுவன் ரமேஷின் புன்னகையையும், முக பாவனைகளையும் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்வீர்...
ஒஸ்தி விமர்சனம்

ஒஸ்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒஸ்தி - மேன்மை. மேதகு குணம் கொண்டவனாக நாயகன் இருப்பான் என தலைப்பைக் கண்டு யூகிக்கலாம். ஆனால் காவல்துறை அதிகாரியாக வரும் நாயகனின் காக்கிச் சட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்த் தகட்டிலேயே அவரது பெயர் "ஓஸ்தி வேலன்" ஆக உள்ளது.நாயகன் பாலனாக இருக்கும் பொழுது அவனது தாய் மறுமணம் புரிந்துக் கொள்கிறார். சிறு வயது முதலே மாற்றாந்தகப்பனுடனும், அவர் மூலமாக பிறந்த தன் தம்பியிடமும் நாயகன் பகைமைப் பாராட்டி வருகிறான். நாயகனின் காளை பருவத்தில் அவனது தாய் இறக்க, மாற்றாந்தகப்பன் மற்றும் அவன் தம்பியுடனுனான உறவில் மேலும் சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல்களை நாயகன் எவ்வாறு கலைகிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.சந்தானம் இல்லாத தமிழ்ப் படம் நமுத்து போன பஜ்ஜி ஆகி விடும் போல. படத்தின் கலகலப்பிற்கு காரணமாக உள்ளார். வையாபுரி, மயில்சாமி, தம்பி இராமையா என நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சந்தானம் மட்டுமே தனித்த...