“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி
தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ஒளிபரப்பியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாகக் கண்டுகளிக்கலாம். மாமனிதன் படம் ஓடிடியில் வெளியாவதையொட்டி, இப்படத்தின் நன்றி அறிவித்தலும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
இயக்குநர் சீனு ராமசாமி, “கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது. காயங்களோடு இருப்பவனை விரட்டிக் கொத்தும் காக்கையைப் பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பைத் தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்தக் காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்...