32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்

Dinesh R சேலம் Published: 24/02/2019 3 நிமிட வாசிப்பு Updated: 26/02/2019 சினிமா
எழுத்து அளவு:

Ameera-a-muslim-girl-story

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த டுலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை 22-02-2019 அன்று ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் னாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனரும் நடிகருமான செந்தமிழன் சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

படம் பற்றி நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “ஒரு நேர்த்தியான படத்தில் நானும் இருக்கிறேன் என நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் அண்ணன் சீமானுடன் இணைந்து நடிக்கிறாம் என்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். இந்தப் படத்தில் உண்மையிலேயே கதாநாயகன் என்றால் அது நாயகி அனு சித்தாரா தான்” என்றார்.

செந்தமிழன் சீமான் பேசும்போது, “இது தமிழ் தலைப்பு அல்ல தான். ஆனால் இஸ்லாமியப் பெண் ஒருவரைப் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. அதனால் அமீரா எனப் பெயர் வைத்துள்ளோம். அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். அமீரா தான் மையக்கரு. நானும், ஆர்.கே.சுரேஷும் இருவரும் அவரை நோக்கிச் செல்லும் கதாபாத்திரங்கள்தான். அதே சமயம் கதையின் ஒவ்வொரு அடுக்கிலும் விறுவிறுப்பும் வேகமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கவே செய்யும்.

சமூக அவலங்கள், பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இஸ்லாம் தீவிரவாதம் என்பது ஒரு கட்டுக்கதை. இந்து, கிறிஸ்து, பௌத்தம் என எல்லா மதங்களிலும் தீவிரவாதம் உண்டு. அதேசமயம் எல்லா மதங்களும் நன்னெறியைத்தான் போதிக்கின்றன. இது ஒரு சமூக அக்கறை உள்ள படம்தான். இன்றைய சூழலில் குடும்ப உறவுகளைச் சொல்வதே ஒரு சமூக அக்கறை என்றாகிவிட்டது.

திரையில் தோன்றுவது எவ்வளவு அவசியம் என்று இயக்குநர்கள் மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோர் எனக்குப் போதித்துள்ளார்கள். படங்கள் இயக்கினாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத்தான் நம்மைச் சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அதற்காக எல்லாக் கதாபாத்திரங்களிலும் நடித்துவிட முடியாது.

பொழுதுபோக்கு படங்களில் நடிப்பதற்கு என்னை அழைக்கவும் மாட்டார்கள் நான் அதற்குத் தேவைப்படவும் மாட்டேன். எனக்கேற்ற கதாபாத்திரங்கள், அதன்மூலம் நாம் சொல்ல விரும்பும் விஷயங்கள் சரியாக அமைந்தால் நடிப்பதில் தவறில்லை. திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாகப் பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. திரைக்கலை என்பது ஒரு தீக்குச்சி போல. இதை நீங்கள் என்னவாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம்” என்றார்.

அமீரா படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

படக்குழு:

>> தயாரிப்பு – தம்பி திரைக்களம் & ஸ்டுடியோ
>> தயாரிப்பு நிர்வாகி  – சிவா & பார்த்திபன் சன்ராஜ்
>> தயாரிப்பு மேற்பார்வை – எம்.சிவக்குமார்
>> இயக்கம் – ரா.சுப்பிரமணியன்
>> பாடல் – கவிப்பேரரசு வைரமுத்து
>> ஒளிப்பதிவு – கே.செழியன்
>> இசை – விஷால் சந்திரசேகர்
>> படத்தொகுப்பு – லோகேஷ்
>> கலை – சிவராஜ்
>> சண்டை – சுப்ரீம் சுந்தர்
>> புகைப்படம் – சாரதி
>> மக்கள் தொடர்பு – ஜான்
>> டிசைன்ஸ் – தண்டோரா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.