
சூப்பர் டூப்பர் திரைப்படம்
சூப்பர் என்பது விலை மதிப்புமிக்க போதைப் பொருள் ஒன்றின் பெயர். டூப்பர் என்பது, ஏமாற்றுக்காரனான தன்னைத் தானே நாயகன் அழைத்துக் கொள்ளும் ஒரு பட்டப்பெயர்.
நிழலுலகத்து மைக்கேலிற்குச் சொந்தமான சூப்பர், டூப்பரிடம் சிக்கிக் கொள்கிறது. மைக்கேல் சூப்பருக்காக டூப்பரைத் துரத்த, டூப்பர் மைக்கேலிடம் இருந்து தப்பித்து, பின் சூப்பர் டூப்பர் அவதாரமெடுத்து, மைக்கேலைத் தன் வழியிலிருந்து அகற்றுவதுதான் படத்தின் கதை.
கோமாளி படத்தில் மனநல மருத்துவராக நடித்திருக்கும் சாரா, இப்படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். நாயகனின் மாமாவாக மீசை வைத்தும், ஐபிஎஸ் விக்ரமாக மீசை இல்லாமலும் வருகிறார். ஷிவா ஷா ரா எனத் திரையில் அவரது பெயரும் நீளம் பெற்றுள்ளது. பேசியே கொல்கிறார், ஆனால் நகைச்சுவைக்குக் கொஞ்சமும் உதவவில்லை. இந்தப் படத்தில் இவர் ஏன் இரண்டு பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பாகத்திற்குக் காத்த...

