
இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யா 41
அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/Suriya_offl/status/1529742532791238657?s=20&t=0VRPPjoh8KUtaJS8KluL3A
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான ‘நந்தா’, ‘பிதாமகன்’ என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியைக் குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களைப் பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலைத் தூண்டியத...


