
TENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்
TENET is a palindrome. முன்னிருந்து பின்னோக்கிப் படித்தாலும் சரி, பின்னிருந்து முன்னோக்கிப் படித்தாலும் சரி ஒரே வரிசையில் எழுத்துகளைத் தரும் சொல். அச்சொல்லை Ambigram ஆகவும் மாற்றித் தலைப்பை உருவாக்கியுள்ளார். அதாவது தலைப்பை 360° திருப்பினாலும், மீண்டும் அதே வரும்.நோலன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படத்தின் தலைப்பில் இருக்கக்கூடிய இந்த பாலிண்டிரோமிற்கும் ஆம்பிகிராமிற்கும், திரைக்கதையுடன் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
இப்போது வரை இந்தத் திரைப்படத்தின் கதை என்னவென்று மிகச் சில நபர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நோலனின் திரைப்படங்களில் தொடர்ந்து பங்காற்றிவரும் நடிகரான மைக்கேல் கெய்னிற்கே கதை என்ன என்று தெரியாது. அத்தனை ரகசியமாக அதனை வைத்திருக்கிறார்.
நோலனைப் பொறுத்தவரையில் அவர் எழுதி இயக்கும் ஒவ்வொரு திரைப்படமுமே கனவுத் திரைப்படம்தான் என்ற போதிலும், 'இந்தத்...


