Shadow

Tag: Thandagan movie

“1000 கோடி சினிமா வர்த்தகம் முடக்கம்” – ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

“1000 கோடி சினிமா வர்த்தகம் முடக்கம்” – ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

சினிமா, திரைச் செய்தி
'தண்டகன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ல்இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், "சினிமா இன்று எப்படி இருக்கிறது? இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? அதை வெளியிடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? இன்று எல்லாப் படங்களும் வெளியிட முடிகிறதா? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன. சிறிய படங்கள் வெளியாகின்றன. வசூல் தான் வரமாட்டேன் என்கிறது. அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. சினிமா அழியக்கூடாது. ஒரு டிக்கெட் 100 ரூபாய் விற்கிறது என்றால் தயாரிப்பாளர்களுக்கும் 30 ரூபாய். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 30 ரூபாய் என்றும் 40 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும் சேருமாறு முறைப்படுத்த வேண்டும். ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து ...
‘செளந்தர்யா: ஒரு அண்ணனின் நினைவுகள்’ – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

‘செளந்தர்யா: ஒரு அண்ணனின் நினைவுகள்’ – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

சினிமா, திரைச் செய்தி
'தண்டகன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், "இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார். அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம்? எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார்? சினிமா ஒரு நல்ல அருமையான தொழில். இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது. இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது. அது பலருக்கும் தெரிவதில்லை. நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய...
தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு

தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு

சினிமா, திரைத் துளி
புகழ் பெற்ற இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை 'தண்டகன்' படம் பார்த்தால்தான் உணர முடியும். இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இப்படத்திற்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே. மகேந்திரன். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர். தொழிற்துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே, கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார். தண்டகன் எனும் தீய குணம் கொண்ட ஒருவனின் பல கொடூரமான செயல்களினால், இந்தச் சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்ற மிகச் சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்தத் தண்டகன் திரைப்படம். பார்வையாள...