32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு

Dinesh R சேலம் Published: 20/08/2019 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Thandagan-Abishek

புகழ் பெற்ற இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘தண்டகன்’. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால்தான் உணர முடியும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இப்படத்திற்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே. மகேந்திரன். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர். தொழிற்துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே, கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார்.

தண்டகன் எனும் தீய குணம் கொண்ட ஒருவனின் பல கொடூரமான செயல்களினால், இந்தச் சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்ற மிகச் சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்தத் தண்டகன் திரைப்படம். பார்வையாளர்களுக்கு ஒரு நிமிடம் கூடச் சலிப்பு தட்டாமல், மிகவும் விறுவிறுப்பான படமாக வந்துள்ளது என படக் குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாகவும், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இருவர் கதாநாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள் . ராட்சசன் வில்லன் ‘நான்’ சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம் , வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கை மோகன் ராஜன் எழுத ஒன்றை இயக்குநர் எழுதி இருக்கிறார்.

>> ஒளிப்பதிவு – தளபதி ரத்னம்
>> இசை – ஷ்யாம் மோகன்
>> படத்தொகுப்பு – வசந்த் நாகராஜ்
>> சண்டை – பில்லா ஜெகன்
>> நடனம் – ஸ்ரீசெல்வி
>> மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.