டியூப்லைட் விமர்சனம்
ஒரு விபத்தில் அடிபட்டு, நாயகனுக்குக் கேட்டல் குறைப்பாடு ஏற்படுகிறது. அதாவது, சத்தத்தை அவரது மூளை உள்வாங்கிக் கொள்ள சுமார் 5 நிமிடங்கள் ஆகும். இந்த நொடி நீங்க நாயகனிடம் ஹலோ சொன்னால், அவருக்கு ஐந்து நிமிடங்கள் கழித்தே கேட்கும். ‘சாவு செய்தி சொன்னால் கருமாதி அன்று தான் அவருக்குக் கேட்கும்’ என்பதால், அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் “டியூப்லைட்” என நாயகனுக்குப் பட்டப்பெயர் சூட்டுகிறார். அத்தகைய நாயகன், ஒரு பெண் மீது, கண்டதும் காதல் வயப்படுகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
நாயகனைச் சுற்றியே கதை நகர்கிறது. அவரது அறிமுகமும், அப்பொழுது அவரது ஆட்டமும், படம் நெடுகே அவருக்கு ஏற்படும் இக்கட்டினை அவர் முகத்தில் பிரதிபலிக்கும் விதத்திலும் அசத்தியுள்ளார். ராம் எனும் டியூப்லைட் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் இந்த்ரா. கார்பொரேட் கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்களின்...