Shadow

Tag: Thumbaa movie

தும்பா விமர்சனம்

தும்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தும்பா எனும் பெண் புலி தன் குட்டியுடன் தமிழக வனத்துறைக்குள் நுழைந்துவிடுகிறது; ஹரியும் உமாபதியும் பெயின்ட் அடிக்கவும், புலியைப் புகைப்படமெடுக்க வர்ஷாவும் டாப் ஸ்லிப் செல்கின்றனர். அந்தப் புலியைக் கடத்த ஒரு குழுவும் மும்மரமாய் இறங்குகிறது. அதன் பின், டாப் ஸ்லிப்பில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. அருமையான குழந்தைகள் படத்துக்கு உத்திரவாதமளித்துள்ளார் இயக்குநர் ஹரீஷ் ராம் LH. அணில், குரங்கு, தும்பா, அதன் குட்டி புலி என VFX காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளது. ஹரியாக தர்ஷனும், உமாபதியாக தீனாவும், நடிக்க மறந்து பேசிக் கொண்டே இருக்கின்றனர். டாப் ஸ்லிப்பின் குளிரில் முகம் விறைத்துவிடுவதால், முகத்தில் எந்த பாவனைகளும் காட்ட முடியாமல் மிகவும் திணறியுள்ளனர். நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் அவர்களுக்கு சரி நிகராய் கம்பெனி தருகிறார். நகைச்சுவை இணையாக இருப்பார்களோ என சந்தே...
தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

சினிமா, திரைச் செய்தி
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தும்பா'. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடும். "நாங்கள் வசனம் எழுதும்போது, எந்தக் கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா எல்லோருமே அதன் சாராம்சம் குறையாமல் பேசியிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஒரு புது முகவரி கிடைக்கும் என நம்புக...
தும்பா – குழந்தைகளுக்கான படம்

தும்பா – குழந்தைகளுக்கான படம்

சினிமா, திரைத் துளி
மாஸ் ஹீரோக்களும் பெரிய படங்களும் தான் லட்சக்கணக்கான லைக்ஸும் ஷேர்களையும் பெறும் என்ற யதார்த்தம் சில நேரம் தவிடுபொடியாகும். ஒரு சிலர் இதனை 'லக்' என்று சொல்லலாம். ஆனால், உண்மையும் யதார்த்தமும் என்னவெனில் ரசிகர்கள் மிகச்சிறப்பான அனுபவத்துக்குக் காத்திருப்பதோடு, அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள். தற்போது குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் (பெண் புலி) தும்பா பங்கு பெறும் 'தும்பா' வீடியோ 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் யூ-ட்யூப்பில் 1.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருப்பது இதை நிரூபனமாக்குகிறது. அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பாவை வைத்து இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குநர் ஹரிஷ் ராம் LH கூறும்போது, "இதைப் பற்றி நான் என்ன சொல்றது? இது முற்றிலும் எதிர்பாராதது, எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சாகச, கற்பனை வகை படங்களைக் குழந்தைக...