Shadow

Tag: Tik Tik Tik review in Tamil

டிக்: டிக்: டிக் விமர்சனம்

டிக்: டிக்: டிக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு வெளியேவே அணு குண்டை ஏவிப் பிளக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு, ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, சுமார் 4 கோடி மக்கள் அழிந்துவிடுவர். இந்தியத் தற்காப்புப் படை, எப்படி நான்கு கோடி மக்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி என்ற வகையில் அசத்தியுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கன்னி முயற்சியில், நடை தளருவது இயற்கை எனினும் விழாமல் இலக்கை அடைவது சாதனையே! அந்தச் சாதனையை மெனக்கெடலில்லாத் திரைக்கதையால் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. 1998 இல் வெளிவந்த, 'ஆர்மகெடான்' ஹாலிவுட் படத்தில் இருந்து மையக்கருவை எடுத்துள்ளனர். உள்ளபடிக்குச் சொன்னால், அது ரசிக்கும்படியே உள்ளது. #னாவின் (அதாவது ஏதோ ஒரு நாட்டின்) அணு ஆயுதத்தைத் திருடும் அத்தியாயம் தான் படத்தின் ஸ்பீட் பிரேக்கர். விண்வெளி ஆராய்ச்சி நிலை...