Shadow

Tag: Tips Kids News

லிடியன் நாதஸ்வரம் – ஓர் இசைப் பிரவாகம்

லிடியன் நாதஸ்வரம் – ஓர் இசைப் பிரவாகம்

சமூகம்
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல், குழந்தைகளுக்கென பிரத்தியேக செய்தி மற்றும் கலை, புகைப்படத் திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதிலளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்துக் காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார். அகாடெமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியைப் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்கள்...