
TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review
சினிமாவில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதைக் கொஞ்சம் உண்மைச் சம்பவங்களை நிறையக் கற்பனையுடன் புனைவாகக் கலந்து கட்டி அற்புதமானதொரு அரசியல் பகடிப்படத்தைத் தந்துள்ளனர் தந்தை மகனுமான தம்பி இராமையாவும், உமாபதி S.இராமையாவும். ‘தலைவர் தம்பி தலைமையில்’ போலவே ஒரு கொண்டாட்டமான படத்தைக் கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் மறுபடியும் அளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவியும், தீபக் ரவியும்.
அடுத்த எம்.ஜி.ஆராகக் குல்கந்த் குமார் எனும் நடிகர் பரிணமிப்பார் என்பதை அனுமானித்து, அவரைப் போஷித்து, ஊக்குவித்து வளர்த்தெடுக்கிறார் நிலச்சுவன்தாரான மன்றாடியார் எனும் பொள்ளாச்சி கோடீஸ்வரர். அவரது எண்ணம் போலவே குல்கந்த் குமார் வளர்ந்து தமிழகத்தின் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார். குல்கந்த் குமாரின் 50 ஆவது வயதில் அவரை அரசியலுக்குள் கொண்டு வருகிறார் மன்றாடியார். அதன் பின் என்னாகி...



