Shadow

Tag: TNPL

‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு

‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு

சமூகம்
விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு அணிகளில் ஒன்றான 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' நேற்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை க்ரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். "தமிழ்நாடு பிரிமீயர் லீக்' வெறும் ஒரு கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டி, மாநில அளவில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாகவும் விளங்குகின்றது. இந்த 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிக்காக நீங்கள் விளையாடும் ஆட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் காண இருக்கிறது. இதன் அணியில் இருந்து பல வீரர்கள் ஏ-கிளாஸ் கிரிக்கெட்டிலும், சர்வதேப் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு என் வாழ்த்துகள்" என்று 'மதுரை சூப்பர் ஜெய...
‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ – சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக

‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ – சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக

சமூகம்
'முத்துநகர்' என்னும் பெருமையைப் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில், வெறும் முத்துக்களும், ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்களும் மட்டும் பிரபலம் கிடையாது, கிரிக்கெட் விளையாட்டும் அந்த மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது தான். விரைவில் நடக்கவிருக்கும் "தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2016" கிரிக்கெட் போட்டியே அதற்குச் சிறந்த உதாரணமாக விளங்கும். 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' எனப் பெயரிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் அணியை, சென்னை 'ஆல்பர்ட்' தியேட்டரின் உரிமையாளர் முரளிதரன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணிக்கு வழிக்காட்டியாக ம்ருகாங் தேசாயும், அணியின் பயிற்சியாளராக முன்னாள் 'ரஞ்சி கோப்பை' விளையாட்டு வீரர் ஜே. ஆர். மதனகோபாலும் பணியாற்றி வருகின்றனர். நாடெங்கும் கிரிக்கெட் ஜுரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்...