இர்ஃபான் இன் இன்ஃபர்நோ
நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான 'டாவின்சி கோட்' மற்றும் 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ்' திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான டாம் ஹான்க்ஸ் உடன் இணைந்து இர்ஃபான் கான் நடித்திருக்கும் 'இன்ஃபர்நோ' திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை இந்த 'இன்ஃபெர்நோ' திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. ஓர் இந்திய நடிகர் உலக புகழ் பெற்ற டாம் ஹான்க்ஸோடு இணைந்து ஹாலிவுட் படத்தில் பணியாற்றி இருப்பது, நம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினருக்கும் பெருமை அன்றோ?
"இந்தியாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவர் இர்ஃபான் கான் என்பதை நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஹிந்தி சினிமா தற்போது துடிப்பான திரையுலகமாக மாறி இருப்பதைப் பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. இர்ஃபான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிக...