சாண்டல்வுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்
கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார்.
புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி படப் பட்டியலில் 'த கிரேட் இந்தியன் கிச்சன்', 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்', வடசென்னை, தேசிய விருது பெற்ற படமான 'காக்கா முட்டை', 'ஜோமௌண்டே சுவிஷேஷங்கள்', ' டக் ஜகதீஷ்', 'வானம் கொட்டட்டும்' என பல வெற்றிப் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் தற்போது முன்னணி நட்சத்திர நட...