வீரசிவாஜி விமர்சனம்
கால் டாக்சி ஓட்டுநர் சிவாஜியிடம் இருந்து 5 லட்சத்தை மோசடி செய்து அபகரித்து விடுகிறார் ஜான் விஜய். வீரம் கொண்டு வெகுண்டெழும் சிவாஜி தன் பணத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
நடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லி நாயகியாக அறிமுகமாகி உள்ளார். 'தீவிர விஜய் விசிறி'யாக வருகிறார். இது மட்டுந்தான் படத்திலுள்ள அதிகபட்ச சுவாரசியமே! 'தாறுமாறு தக்காளி சோறு' பாடலில் இடுப்பை வெட்டி வெட்டி நடக்கிறார். ஏழைக் குழந்தைகளுக்கு நாயகன் புத்தகங்கள் வாங்கித் தந்ததும் காதல் மலர்ந்து விடுகிறது. இப்படியாக இயக்குநர் கணேஷ் விநாயக்கின் கற்பனையின்மை ஃப்ரேம்க்கு ஃப்ரேம் பூதகரமாய் உறுத்துகிறது.
அநாதை நாயகன்; அவன் அக்காவாக நினைக்கும் வினோதினியின் மகளுக்கு மூளையில் கட்டி; நாயகியின் மேல் முதல் பார்வையிலேயே காதல்; ஆப்ரேஷனுக்காக நாயகன் புரட்டும் பணத்தை வில்லன் ஏமாத்தி விடுகிறான்; நாயகனுக்கு தலையில் அடிபட்டு கடைசி 6 மாத...