வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் விமர்சனம்
தனது தந்தையின் மருத்துவச் செலவுக்கு கந்து வட்டியில் பணம் வாங்குகிறான் கார்த்திக். பணத்தை கெடுவுக்குள் கட்டாததால் கந்துவட்டிக்காரனால் மிரட்டப்படும் கார்த்திக், பணத்துக்காக என்ன செய்கிறான் என்றும், அதன் சங்கிலித் தொடர் விளைவுகளாக என்ன நேர்கிறது என்பதும்தான் படத்தின் கதை.
படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை. எப்படியாவது ரசிகர்களை ஈர்த்து விட வேண்டுமென வைத்த தலைப்பு போலும்! மூன்று மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருகிறேன் என்று சொன்ன கார்த்திக்கிடம், “வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என நினைச்சேன். ஏமாத்திட்டியே!” என்கிறான் கந்துவட்டிக்காரன் படம் தொடக்கத்திலேயே. இந்த வசனம் தான் படத்துக்கும் தலைப்புக்குமான ஒரே தொடர்பு. ஆனால் நாயகன் அவ்ளோ வெள்ளையும் கூடக் கிடையாது.
படத்தில் இரண்டு கதைகள் ஒரு புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. ஒன்று, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசம்; மற்றொன்ற...