Shadow

Tag: Vijay Milton about Mazhai Pidikatha Manithan

மழை பிடிக்காத மனிதன் – விஜய் மில்டன்

மழை பிடிக்காத மனிதன் – விஜய் மில்டன்

இது புதிது, சினிமா, திரைத் துளி
ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது பார்வையைக் காட்சிகளாக மாற்றும் போது அந்தப் படைப்பின் காட்சிகள் புதுமையான காண் அனுபவத்தை அளிக்கும். படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.விஜய் மில்டன், “தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாததால் நிறைய விஷயங்களை என்னால் இப்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்குச் சிறப்பான நடிப்பின் ம...