மாயஜால விஸ்வம்பரா உலகில் சிரஞ்சீவி
மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் "விஸ்வம்பரா" படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பான "விஸ்வம்பரா" படத்தின் டைட்டில் டீஸர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்தார். மிகச் சிறப்பான தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியிருந்த இந்த டீசர், நாடு முழுவதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைp பெற்றது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலக சினிமாவுக்கு இணையாக அமைந்துள்ளது. பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் உலகை உருவாக்க, படக்குழு 13 பெரிய செட்களை அமைத்தது, படத்தின் காட்சிகளைப் படமாக்கி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கினாலும், சிரஞ்சீவி, ஃபிப்ரவரி 2 அன்று விஸ்வம்பராவின் மாயஜால உலகத்தில் கால் பதித்துள்ளார். ஹைதராபாத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவான ஒரு பெரிய செ...