
ViU – செம ஃபீலு ப்ரோ!
உலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT (Over-the-Top content) சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளைத் துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
முன்னதாக Vuclip President அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குநர்கள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். Viu லோகோவையும் சிற...

