Shadow

Tag: White Horse Studios

OMG – சன்னி லியோனின் ஹாரர் காமெடி படம்

OMG – சன்னி லியோனின் ஹாரர் காமெடி படம்

சினிமா, திரைத் துளி
சன்னி லியோன் நடிக்கும், வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் “ஓ மை கோஸ்ட் (OMG)” எனும் ஹாரர் காமெடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களில் சன்னி லியோன் தோன்றுகிறார். இப்படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான R. யுவன், "இந்தப் படத்திற்காக, சன்னி லியோன் தனது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டார். OMG என்பது ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் சன்னி லியோன் பாத்திரத்திற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருப்பதால், அவரது தோற்றம் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது. “ஓ மை கோஸ்ட் (OMG)” திரைப்படத்தினை VAU Media Entertainment சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் White Horse Studios சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். சதீஷ், தர்ஷா குப்தா முதலியவர்கள்...
“இதழும் இதழும் இணையட்டுமே!” – இயக்குநர் ஆர்வா

“இதழும் இதழும் இணையட்டுமே!” – இயக்குநர் ஆர்வா

சினிமா
சன்னி லியோன், யோகி பாபு, ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கும், ”ஓ மை கோஸ்ட்” என்ற படத்தை VAU மீடியா எண்டர்டெயின்ட்மென்ட் & White Horse Studios இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் தற்பொழுது ’அப்பா காண்டம்’ என்னும் குறும்படத்தை இயக்கிய ஆர்வாவின் இயக்கத்தில் ”இதழும் இதழும் இணையட்டுமே” என்ற பெயரில் ஒரு வெப்சீரீஸைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த வெப் சீரிஸில் கதாநாயகனாக ’பிளாக் ஷீப்’ கலையரசன் தங்கவேல், ’விஜய் டிவி’ அர்ச்சனா குமார், நியூஸ் 18 காம்பியரர் முபாஷீர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இது ஒரு வித்தியாசமான, நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த ”இதழும் இதழும் இணையட்டுமே” வெப்சீரிஸின் கதை ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ”என்னடா.. ஒரு பெண், ஒரு ஆணிடம் இப்படி ஒரு விஷ...