32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வட்டம் – ஆண் பெண் உறவிற்கு இடையே!

Dinesh R சேலம் Published: 25/07/2022 3 நிமிட வாசிப்பு Updated: 27/07/2022 சினிமா
எழுத்து அளவு:

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குநர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையின் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தயாரிப்பாளர் SR பிரபு, “கமலக்கண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும். அதை இந்தப் படம் பேசும். நடிகர் சிபி தான் இந்தக் கதையை எடுத்துச் செல்லச் சரியாக இருப்பார் என நினைத்து இந்தப் படத்திற்குள் அவரைக் கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்தப் படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்தப் படத்தை மெருகேற்ற பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. ஜூலை 29 இந்தப் படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. அவர்களுடன் எங்களுக்கு மூன்றாவது படம்” என்றார்.

நடிகர் சிபிராஜ், “வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்தக் கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்தக் கதை ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்தப் படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது. இயக்குநர் கமலகண்ணன், எப்படி 90’களில் இயக்குநர் மணிவண்ணன் அரசியல் பேசினாரோ, அது போல கருத்துக்கள் கொண்டவர். மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் கமலகண்ணன், “இந்தப் படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இருந்து இந்தப் படம் முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்ய மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக த்ரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்தச் சமூகத்தில் அதை விட பல த்ரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்தத் திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரைச் சென்றடையும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை, இந்தப் படம் சொல்ல முயற்சி செய்திருக்கிறது” என்றார்.

ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “வட்டம்” நேரடி திரைப்படமாக வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.