32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர்

Dinesh R சேலம் Published: 06/10/2021 2 நிமிட வாசிப்பு Updated: 30/11/2021 சினிமா
எழுத்து அளவு:

வித்யூத் ஜம்வால் நாயகனாக நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 5 அன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்தியேகமாக வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஹிந்தி திரை உலகில் பணயக் கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ‘சனக்- ஹோப் அண்டர் சீஜ்’ திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும் வகையில் டிரைலர் அமைந்திருக்கிறது.

கனிஷ்க் வர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வித்யூத் ஜம்வால், பெங்காலி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகை ருக்மணி மைத்ரா, நடிகை நேகா துபியா மற்றும் சந்தன ராய் சான்யல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‌

நடிகை ருக்மணி மைத்ரா இப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமாகிறார். இவரும் படத்தின் நாயகன் வித்யூத் ஜம்வாலுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்சன் திரில்லர் ஜானரில் ‘சனக்’ திரைப்படம் இருந்தாலும், இப்படத்தின் முன்னோட்டத்தில் இவ்விருவருக்கும் இடையேயான காதலும் பார்வையாளர்களின் மனதை இதமாக வருடும். இது கதையுடன் ஒருங்கிணைந்திருப்பதும் கூடுதல் சிறப்பு.

நடிகர் வித்யூத் ஜம்வால் பேசுகையில், ”இந்தத் திரைப்படம் கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. அனைவரையும் போல நாங்களும் இப்படத்தின் பணிகளுக்காக சென்றோம். இப்படத்திற்காக கடுமையாக உழைத்து, பணிகளை நிறைவு செய்தோம். நீங்கள் படத்தைப் பார்க்கும் போது உங்களைப் பற்றிய படைப்பாகவும், உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு உதவி செய்திடும் உத்வேகத்தையும் அளிக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் விபுல் அம்ருத் லால் ஷா பேசுகையில், ”இந்திய அளவிலான பார்வையாளர்களுக்கு ‘சனக்’ திரைப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த திரைப்படம் பணயக் கைதியை பற்றிய கதையை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துச் சொல்லாமல், வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்பட்ட அற்புதமான முயற்சி” என்றார்.

வித்யூத் ஜம்வால், சந்தன் ராய் சான்யல், நேகா துபியா இவர்களுடன் பெங்காலி சூப்பர் ஸ்டார் நடிகை ருக்மணி மைத்ரா நடித்திருக்கும் ‘சனக் – ஹோப் அண்டர் சீஜ்’, ஜீ ஸ்டுடியோஸ், சன்ஷைன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து வழங்குகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 15 தேதியன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், கனிஷ்க் வர்மா இயக்கி இருக்கிறார்.

சனக் ட்ரெய்லர்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.