ஜீ5, சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரம்மாண்டமாக நடந்த “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்ச்சியில், தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது.
பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர் “நிலமெல்லாம் ரத்தம்” எனும் ஜீ5 பிரத்தியேக தொடர் அறிவிக்கப்பட்டது. இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில் ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் திரில்லர் தொடர் “கார்மேகம்” மற்றும் அரசியல் டிராமாவான “தலைமை செயலகம்” ஆகிய தொடருடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இளைஞர்கள் இதயம் வென்ற காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வரவிருக்கும் “பேப்பர் ராக்கெட்” தொடர்கள் பற்றி இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
இவை தவிர, ஜீ5 தளத்தில், இயக்குநர் விஜய்யின் டீன் ஏஜ் டான்ஸ் டிராமா ஃபைவ் – சிக்ஸ்- செவன்- எயிட், வசந்த பாலன் இயக்கத்தில் ‘தலைமை செயலகம்’ , எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ‘கொலைகார கைரேகைகள்’, நாகா இயக்கத்தில் ஒரு த்ரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ ஆகியவையுடன் மற்றும் பல ஆர்வமூட்டும் படைப்புகளான ‘அல்மா மேட்டர், ‘அயலி’ மற்றும் அருண் விஜய், ப்ரியாபவானி சங்கர் நடிக்கும் ‘யானை’, விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூட் மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘தமிழரசன்’ படங்களும் அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைவரது பார்வையும் ஜீ5 இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான ‘விலங்கு’ தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மீதும், பெரு வெற்றி பெற்ற ‘மலேசியா டூ அம்னீஷியா’ மற்றும் ‘விநோதய சித்தம்’ படங்களின் குழுவினர் மீதுமே இருந்தது.
வலுவான தமிழ்க் கதைகளை வழங்கி வருவதன் மூலம் தமிழில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் ஜீ5, இந்தியாவின் பல மொழி பொழுதுபோக்கு தளமாக அதன் நிலையை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்ட சூப்பர்ஸ்டார் அஜித்தின் ‘வலிமை’ உலகளவில் வேகமாக 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைப் பெற்று மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தமிழ் ஓடிடி தளம் பற்றி திரு. மணீஷ் கல்ரா Chief Business Officer, ZEE5 இந்தியா கூறியதாவது, ” இந்த 2022 ஆம் ஆண்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக இருக்கும். ஏனெனில் நாங்கள் அனைவருக்குமான கதைக்களங்களை கொண்ட படைப்புகளை வெளியிட உள்ளோம். தமிழ் பொழுதுபோக்கு தளத்தில் மிகப் பெரிய அடையாளத்தை ரசிகர்களின் உதவியோடு பெற நாங்கள் காத்துக் கொண்டுள்ளோம். தமிழ் மொழி வர்த்தகம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஜீ5 இல் எங்களது தரத்தை மேலும் உயர்த்திக் கொண்டு, எங்களால் சாத்தியமான அனைத்தையும் ரசிகர்கள் மற்றும் எங்களின் சந்தாதரர்களுக்காகத் தொடந்து தருவோம்” என்றார்.
President – Content and International Markets at ZEEL திரு. புனித் மிஸ்ரா, “இந்தியாவின் ஓடிடி தளங்களில் ஜீ5 உடைய வளர்ச்சி எதிர்பார்ப்புகளையும் தாண்டியதாக அமைந்துள்ளது. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தமிழ் மொழியில் எங்களது படைப்புகளுக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் தெளிவான சிந்தனை மற்றும் யுக்திகள் இணைந்து சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்படும் சிறந்த கதைக்களங்கள், தமிழ் மற்றும் பிற மொழி வர்த்தகத்தைப் பெறுவதற்கு திறவுகோலாக உள்ளது. கதைகளுக்கான வடிவமைப்பு மற்றும் அணுகுமுறை எங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது, இதை #SoultoScreen என்று அழைக்கிறோம், இது கலாச்சாரம் மற்றும் மக்களைப் பற்றிய எங்களின் நெருக்கமான புரிதலில் உள்ளது, மக்களின் வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டு, அவர்களின் கற்பனையைத் தூண்டும் வகையில், கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்கி வருகிறோம்” என்றார்.
ஐந்து லட்சம் மணி நேரத்திற்கும் அதிகமான தொடர்கள் மற்றும் படங்கள், 160க்கும் அதிகமான சேனல்களையும் கொண்டுள்ளது. 3500 திரைப்படங்கள், 1750 தொடர்கள், 700 ஒரிஜினல்களை ஜீ5 கொண்டுள்ளது. அது போக இந்தியாவின் 12 மொழிகளில் படைப்புகளை உருவாக்கி வருகிறது. ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மாராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் வழங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான ஓர் அற்புதமான கதை வரிசையை ஜீ5 தளம் கொண்டுள்ளது, ஜீ5 சந்தாதாரர்களுக்குப் பரந்த அளவிலான பட்டியலை வழங்கும்.
ஜீ5 தளத்தைப் பின் தொடர:
www.facebook.com/ZEE5Premium
www.twitter.com/ZEE5Premium
www.instagram.com/ZEE5Premium