
ஏன் என்னை ஏதோ செய்தாய் | Yen Ennai Edho Seidhai review
படத்தின் தலைப்புத்தான் படத்தின் கருவும் கூட! நாயகியைப் பார்க்கும் நாயகனுக்கு, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ எனத் தோன்றுகிறது.
மது எனும் கால் கேர்ளைச் சந்திக்கும் கார்த்திக்கிற்கு, அவள் மீது காதல் வருகிறது. மதுவும் கார்த்திக்கை விரும்ப, இருவரும் லிவிங் டுகெதரில் இணைகின்றனர். இவ்வுறவு கல்யாணத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, குடிப்பழக்கமுடைய கார்த்திக்கோ போதையில், மதுவிடம் கோபத்தில் வார்த்தையை விட்டுவிட, மனதுடையும் மது கார்த்திக்கை விட்டுச் சென்று விடுகிறாள். அந்தப் பிரிவாற்றாமை கார்த்திக்கை என்ன செய்கிறது என்றும், அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை.
மது கதாபாத்திரம், வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டது. அதனாலோ என்னவோ, படத்தின் வசனங்களில் ஏகத்திற்கு ஆங்கிலத்திலேயே உள்ளன. லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் என்பதால், பின்னணி இசையைக் கழித்துவிட்டு வசனங்களை உற்றுக் கேட்கப் ப...
















