விவேக்கின் கால்ஷீட் கிடைக்காததால்தான் வி.டி.வி.கணேஷை விண்ணைத் தாண்டி வருவாயாவில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கெளதம் மேனன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘ஆனால் எப்போ கெளதம் என்னிடம் கேட்டார்? ஒருவேளை நான் மறந்திருப்பேன்’ எனச் சமாளித்தார் விவேக்.
மின்னலே இயக்கிய கெளதம்க்கும், என்னை அறிந்தால் அறிந்தால் கெதம்க்கும் என்ன வித்தியாசமெனக் கேட்ட பொழுது, “மின்னலே கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர். என்னை அறிந்தால் கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. ஆனால் மாற்றமில்லாத அதே அன்பு” என்றார் விவேக்.
என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிரதான கதாபாத்திரங்களைப் பற்றி, “அன்று துடிப்பான காதல் மன்னன். இன்று பொறுப்பான காவல் மன்னன். ஆனால் என்றும் அவரெனக்கு நண்பர்.
இனிமை, பெண்மை – திரிஷா. அழகு, அறிவு – அனுஷ்கா.
ஒரு சீரியசான, குசும்புமிக்க கதாப்பாத்திரத்தில் விவேக் நடிக்கிறார்; சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். ஆனால் எடிட்டர் ஆண்டனியின் கத்திரியில் இருந்து விவேக் தப்பித்தால், அது இவருக்கு முக்கியமான படமாக இருக்கும்” எனச் சிரித்தார் விவேக்.