Shadow

அமேசானில் வெளியான ஜெ.பேபி திரைப்படம்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி , தினேஷ், மாறன் நடிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் வயது முதிர்ந்தவர்களின் உளவியல் சிக்கலையும் பேசியிருக்கும் ஜெ பேபி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் அரசியல் கட்டாயமாக இருக்கும்.
ஜெ பேபி படம் வழக்கமாக பேசும் எந்த அரசியலையும் பேசாமல் குடும்ப உறவுகளின் உன்னதத்தை பேசும் விதமாக அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய கருத்தை உள்ளடக்கியதாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.