Shadow

அறிவாளிகள்

எவ்ளோ தடவ சொல்றது ஊரு பக்கம் போகாதன்னு இப்ப அழுது என்ன புண்ணியம் என்று சொன்னவாரு கூட்டத்திற்குள் நுழைந்தாள் எட்யாங்.
ஆம் அனுபவமும் அறிவும் ஒருங்கே பெற்றவள் அவள். அதனால் தான் கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தாள்.
அனைவரும் வானத்தை நோக்கி ஊளையிட்டு,  தலைவிக்கு மரியாதை செலுத்தினார்கள்.   கூட்டத்தின் செல்ல பிள்ளையான ரூஸ்  மனிதர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு மூன்று நாட்களே ஆன நிலையில், மாயா காயத்துடன் திரும்பி உள்ளான். ” நாம்ப எல்லாம் சபிக்க பட்டவங்க எப்பவும் நம் இனம் மனிதர்களுக்கு அடிமைகள் தான் இவங்கள கட்டுபடுத்த யாருமே இல்லையா?” என்று ஒரு குரல் கூட்டத்தின் மத்தியில் ஒலித்தது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். “ஏன் இல்லை கடவுள் இருக்கிறார்”.. என்று பேசத்தொடங்கினாள் எட்யாங். “கடவுளா ?? என்ன பெரிய கடவுள் மனிசங்களுக்கு மட்டும் எல்லாம் கொடுத்துட்டு நாமளா எமாத்தினவர் தான அவரு .”என்று சொன்னாள் மேவா அனைவரும் ஊளைஇட்டு மேவாவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

 “அட முட்டாள்களே அனைத்து உயிர்களையும் கட்டுபடுத்த எதிரிகளை உருவாக்கிய கடவுள் மனிதர்களுக்கு மட்டும் தனியாக எதையும் படைக்க வில்லை அதற்கு பதில் அறிவு எனும் சிறப்புத்தன்மையை கொடுத்துள்ளார் “.என்று சொன்னாள் எட்யாங்.” என்ன தல சொல்றீங்க? அந்த அறிவ வச்சித்தான அவங்க எல்லாம் பண்றாங்க” .என்று கேட்டாள் மேவா. “இல்ல அந்த அறிவு தான் அவங்களுக்கு அழிவு அறிவ வச்சிதான் மதத்த உருவாக்கி இருகாங்க எந்த கடவுள் நம்பள எல்லாம் படைத்தாரோ அவர் பேர சொல்லியே அவங்க அடிச்சிக்கிட்டு அழிவாங்க “,என்று சொல்லி முடித்ததும் மழை பெய்ய தொடங்கியது. அனைவரும் ஓட்டம் பிடித்தார்கள் …..