Shadow

படைப்புகள்

ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு – சிறப்பைக் கூறும் ”மகா கவிதை”க்கு பெருந்தமிழ் விருது

ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு – சிறப்பைக் கூறும் ”மகா கவிதை”க்கு பெருந்தமிழ் விருது

இது புதிது, கவிதை, படைப்புகள்
கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றனகவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன.முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு - சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெருங்கவிதை நூல் மகா கவிதை. அது சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது என்று மலேசிய இந்தியக் காங்கிரஸின் தேசியத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் இ...
கர்ணன் சிறந்த நண்பனா?

கர்ணன் சிறந்த நண்பனா?

ஆன்‌மிகம், கதை
கர்ணன் கொடையாளியா? மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக் கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல். வில்லி புத்தூராரும், 'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ? கோக்கவோ?'" என்றான்; திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும், தருமமும்!' என்றான். என எழுதியுள்ளார். இதில் யார் முதல் என்று தெரியவில்லை. அதாவது துரியோதனன் மனைவி கர்ணனுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். அப்போது துரியோதனன் உள்ளே வருகிறான். அவன் வருவது கர்ணனின் பின் பக்கம், அவள் பார்த்து எழுந்துவிட, கர்ணன் தோல்வி...
நான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து

நான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து

கவிதை
வயக்காட்டிற்கும் வீட்டிற்கும் எனக்கு ஒரே முற்றம் தான்.. வாசல் திறந்தால் காற்று காதல் கீற்று பாடும்.. ஜன்னல் வழியே நெற்கதிர்கள் முத்தம் கொடுத்து பேசும்..அப்பாக்கும் அம்மாக்கும் வயக்காடு தான் சாமி முள்ளு கிழித்தாலும் பாம்பு முத்தமிட்டாலும் செருப்பு போட்டே பாத்ததில்ல..புண்ணாக்கும் மணக்கும்னு தெரிஞ்சவங்களுக்கு கணக்கும் கைக்கொடுக்கும்னு தெரியாம போச்சு..நாலு மூட்ட நெல்ல சந்தையில கணக்கா விக்க நாலு எழுத்து படிக்க தான் என்ன வைக்க பள்ளிக்கூடம் ஒண்ணு சேந்து நானும் படிக்க..கிடுகிடுனு காலம் போக கடகடனு நானும் படிக்க அரசு தேர்வும் பக்கத்துல வந்து நிக்க ஓவென அப்பா அம்மா கதறல் கேட்க என்னவோ ஏதோவென நானும் பாக்கஏதோ எட்டுவழி சாலையாம் இருமாதம் தான் வேளையாம் எங்கள் சோலை இனியாகும் பாலையாம் சிம்மம் போல் சினம் கொண்டேன் ஆயுதம் எடுத்தேன்.. வேறெ...
தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

கதை, படைப்புகள்
அன்புள்ள செல்லா, உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லைknambi . ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் கூடாது. அதுவே நம் சக்திக்கு மீறியதுதான். போனால் போகிறது என்று கொடுக்கத் தயாராக இருந்தாலும்கூடக் கிடைக்க மாட்டேன் என்கிறதே. நேற்று நடந்த அந்தச் சம்பவம், அந்தக் காட்சி, அதை நீ பார்த்திருக்க வேண்டுமே செல்லா, தேனாம்பேட்டையில்… தேனாம்பேட்டை பக்கம்தான் போய்க்கொண்டிருந்தேன்.. ஒரு சந்து. குப்பையும், சேறும் சாக்கடையும், பன்றிக் கூட்டமும்...
ஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்

ஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்

கவிதை, படைப்புகள்
கம்பிகளில் தொத்திக் கொண்டிருந்த பாடல்கள் ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கின கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு நான் யார் என்பதற்கான ஒரு வார்த்தையின் பிறப்பை செவிமடுக்க ஆரம்பித்தேன். பளீச்சென்ற கிளியைப் பிடிக்கத் திறந்தே இருக்கும் கூண்டுகளைப்போல என் கண்களை வைத்துக் கொண்டு எனக்குள் இருக்கும் உலகைப் பிடிக்க நடை பயில்கிறேன் மூன்றடிகள் முன்னோக்கி மூன்றடிகள் பின்னோக்கி திரும்பத் திரும்ப நடக்கிறேன். என் பாதையினால் உலகைச் சுற்ற விழைகிறேன். சுற்றிச்சுற்றி வருகிறேன் எடையற்று மேலெழும்பி கீழே விழுகிறேன். அம்மாவின் திரைச்சீலைகளைப் போல் மேகங்கள் ஈரமாகவும் மென்மையாகவும் உள்ளன. என் வாயில் ஒரு புளிப்புச் சுவை உள்ளது படுக்கைக்கு அருகிருக்கும் ஒரு விளக்கு போல நிற்கிறேன் இதமான கைகளின் வன்முறையான தொடுதலின் போதோ கூர்மையாக நோக்கும் அன்பான பார்வையினாலோ ஒரு துப்பாக்கி பின்நகர்வது போல் பின்னிடுகிறேன...
கத்தரிக்காய்க் கல்யாணம் (சிறார் கதை)

கத்தரிக்காய்க் கல்யாணம் (சிறார் கதை)

கதை
அன்று விடிவதற்கு முன்னரே ஊரே கோலாகலமாக இருந்தது. சாரை சாரையாய் வெண்டைக்காய்கள், பாகற்காய்கள், முருங்கைக்காய்கள் என அனைத்து வகை காய்கறிகளும் ஊரின் பொதுவில் இருந்த மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் புத்தாடையுடன் ஜொலிக்கும் ஆபரணங்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டும், ஆடிப் பாடிக்கொண்டும் நடந்தும், வண்டியிலுமாக வந்த வண்ணம் இருந்தனர். அந்த ஊருக்கு அப்போதுதான் குடிவந்திருந்த பச்சை மிளகாய்க் குடும்பத்தினர் 'ஆ'வென வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆர்வம் தாங்க முடியாத பச்சை மிளகாய்ப் பெரியவர் ஒருவர் வழியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த பீர்க்கங்காயை நிறுத்தி, "என்ன விசேஷம்?" என்று வினவ, பச்சை மிளகாயை ஏற இறங்கப் பார்த்த பீர்க்கையார், "ஊருக்குப் புதுசா நீங்க? இன்னிக்குக் கத்தரிக்காய் வீட்டுல கல்யாணம்! ஊரே கொண்டாட்டமா இருக்கும். நீங்களும் சீக்கிரம் குளிச்சிட்டுத் தயாராகுங்க! ...
சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

கதை, புத்தகம்
“ஒரு கொடி செஞ்சு கொடு, அண்ணாச்சி.” “என்ன கொடி கேக்கிறே” அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன். ஓடிப்போய்த் தன் மூன்றாம் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தைத் தன் அண்ணனிடம் நீட்டிக் காட்டுகிறான். தேசக் கொடி என்று தலைப்பு; வர்ணம் எதுவும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் ‘மூவர்ண’க் கொடியின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது. “இந்தக் கொடி செஞ்சுகொடு, அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு எல்லாரும் கொண்டுக்கிட்டுப் போகணும்” என்று சொல்லுகிறான் கருப்பையா. அவன் முகத்தில் களிப்பும் ஆர்வமும் மின்னுகின்றன. இருபக்கமும் கூராக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிறத் துண்டுப் பென்சில் ஒன்றினால் சுவரில் உழவு நடவுக் கணக்குக் குறித்துக் கொண்டிருக்கும் பாண்டியன், “இரு, வாறேன்” என்று மேலும் சிறிது நேரம் சில எண...
அவள் பெயர் அபிராமி – 2

அவள் பெயர் அபிராமி – 2

கதை, தொடர்
முடிவு செய்து வைத்தபடியே கதிரேசு வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து வைத்தாள் ராமாயி. "எலே கதிரேசு! அகிலாண்டேஸ்வரிக்கு வயசாயிகிட்டே போகுது! சீக்கிரமா ஒரு கண்ணாலத்தைப் பண்ணிப் பாக்கோணும்னு இல்லாம இப்படிக் கிணத்துல போட்ட கல்லு கணக்கா இருந்தா எப்படி?" தாழியில் இருந்த தண்ணீரை இரு கைகளால் அள்ளி முகம் கழுவிக் கொண்டிருந்த கதிரேசு நிமிர்ந்து ராமாயியை ஒரு கணம் கூர்ந்து நோக்கினான். "ஆத்தா! இப்ப அவளுக்கு என்ன வயசாயிட்டு! இப்பதானே பன்னெண்டாப்புப் போறா! கண்ணால பேச்செடுத்தா கலெக்ட்டர் வரைக்கும் வந்து நிப்பானுக! கம்பிதான் எண்ணனும்!" "போடா! போக்கத்த பயலுவ! அவனுகளுக்கென்ன தெரியும் பொம்பள புள்ளய பெத்து வெச்சிருக்குறவனோட கஷ்டம்! நம்ம பொண்ணுக்கு எதையெதை எப்ப பண்ணனும்னு நமக்குத் தெரியாதா?" "அப்பாத்தா! சித்தப்பூவை உள்ள தள்ளாம விட மாட்டே போல" கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் சுப்ரமணி. வெளித் தி...
அவள் பெயர் அபிராமி – 1

அவள் பெயர் அபிராமி – 1

கதை, தொடர்
"ஏய் அகிலாண்டேஸ்வரீ.. இன்னும் என்னடீ பண்றவ, நேரங்காலமா இஸ்கூலுக்குப் போய்ச்சேர வேண்டாமா? ஊஞ்சிநேதக்காரி வந்துட்டா பாரு.." வெளியில் இருந்து கத்திய அப்பாத்தாவின் குரலைப் பொருட்படுத்தாது தனது முகத்தில் அப்பிய அதிகப்படியான பவுடரை ரசம் தேய்ந்த கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொண்டிருந்தாள். மடித்து ரிப்பன் கட்டியிருந்த ரெட்டை ஜடைகளை இணைக்கும் விதமாய்க் குண்டுமல்லிச் சரமொன்றைத் தொடுத்திருந்தாள்.  அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்பட்ட அகிலா அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு. பெரியப்பா கண்ணைய்யனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். சித்தப்பா செல்வராசுவிற்கு மூன்று ஆண் வாரிசுகள். கண்ணைய்யனுக்கும் பெண் வாரிசு வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் இரண்டோடு நிறுத்திக் கொண்டார். செல்வராசுவின் விடா முயற்சியும் பலனளிக்கவில்லை. பதினாறு வயசு அகிலாவிற்கு இரண்டரை வயதில் தம்பி. பெரியப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் அகிலா அப்படியொரு செல்...
நிவேதா

நிவேதா

கதை, படைப்புகள்
ஒரு மாலைப் பொழுது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள் நிவேதா. அவளுக்கு 21 வயது. மாநிறமாய் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். பழைய டிவிஎஸ் 50இல் மிகவும் நிதானமாக, பொறுமையாக வாகனத்தை இயக்கும் பழக்கம் கொண்டவள். அன்றைக்கும் அதே நிதானமான வேகத்துடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். வழியில் தோழியைச் சந்தித்து சிறிது நேரம் பரஸ்பரம் பேசி மகிழ்ந்து விட்டு, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். மொத்தமும் இரு அறைகளே கொண்ட எளிமையான வீடு. ஏழ்மையான வீடும் கூட. அவளுடைய குடும்பம் அழகான அளவான குடும்பம். அம்மா,அப்பா மற்றும் தம்பி. இவர்கள் தான் இவளின் உலகம். குடும்பத்தின் மீது அளவற்ற பாசமும், அக்கறையும் கொண்டவள். அவர்களுக்கு இவள்தான் உலகம் என்று சொல்ல முடியாது. இவளது தம்பி தான் அவர்களின் உலகம். தம்பி இவளை விட 6 வயது சிறியவன். ஏனோ பெற்றோருக்கு இவளை விட, செல்லக் குழந்தையான தம்பியின் மீது பற்ற...
அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

கதை, நம்பினால் நம்புங்கள், படைப்புகள்
‘ஆர்வக் கோளாறில் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே! இப்போது இங்கிருந்து எப்படி வெளியே போவது?’ என்று தெரியாத பதட்டத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான் வெங்கடேஷ். சுமாவிற்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவு தான்! நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. வெங்கட் என்ற வெங்கடேஷ் ஃபோட்டோ எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன். காமெரா என்பது ஒரு சாதனமே. நம் பார்வையில் தெரியும் காட்சிகளை மிக அழகான கோணத்தில் படமாக்குவதுதான் கலை என்று பாலுமகேந்திரா எப்போதோ ஒரு பேட்டியில் சொன்னதை வேதவாக்காகக் கொண்டு சதாசர்வகாலமும் அழகான காட்சிகளைத் தேடி காமெராவும் கையுமாகவே திரிபவன். பனிப்புயலின் புண்ணியத்தால் நியூயார்க் நகரம் முழுவதும் வெண்பனிக் குவியலால் உறைந்திருந்தது. வழக்கமாய் படம் எடுக்கும் ஏரியைச் சுற்றி வந்த போது அவனுக்கு ஏற்பட்ட விசித்திரமான உந்துதலில் மரங்கள் சூழ்ந்த அமைதியான கல்லறையில் படம் எடுக்கலாம் என தீர்மானித்துக் கல்லறை தோட...
சிங்கமுக ஆசிரியர்

சிங்கமுக ஆசிரியர்

கதை, படைப்புகள்
ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாண மண்ணில் தொடங்கிய நான் சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து நாவலப்பிட்டி எனும் ஊருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தேன். அங்கே அடுத்த வகுப்பினில் ஓராண்டு படித்தேன். பின் தந்தையின் வேலை மாற்றத்தால் எட்டியாற்தோட்டை எனும் ஊருக்குச் சென்றோம். அங்குள்ள தமிழ்ப் பாடசாலையில் அடுத்த இரண்டாண்டுகள் படித்தேன். மீண்டும் மாற்றலான தந்தையைப் பின்தொடர்ந்த நாங்கள் இரத்தினபுரி என்ற நகரில் சுமார் ஆறாண்டுகள் வாசம் செய்தோம்.இரத்தினபுரி தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரம் வரை பயின்று அதில் சித்தியும் பெற்றதோடு ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தேன். அந்தப் பாடசாலையில் ஸ்திரமாக எனது பெயரை, கல்வி மற்றும் பிற துறைகளில் நிலை நாட்டினேன். கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தையும் அங்கே தொடரலாம் என்ற என் கனவு பொய்யானது.தந்தை மீண்டும் மாற்றலுக்குத் த...
உண்ணாவிரதம் – உன் நா விரதம்

உண்ணாவிரதம் – உன் நா விரதம்

கவிதை, படைப்புகள்
அரசியல் வாணியமாக்கிய விடாணி உருவலும் உறுவலால் உருகியது வரி வாரியம் வறமிளைக்கவோ மோறையும் வாறு இழந்ததுவேண்டியன பலவும் பட்டியலில் உணவுமில்லா பெரும் பந்தலில் தொண்டர்கள் யாவரும் பட்டினியில் நீயோ பொருளீட்டும் இச்சையினால்உண்ணாதிருக்கும் சில தினம் மருத்துவமோ தானோ அனுதினம் விவசாயி வாழ்வுமோர் புதினம் பொதுமக்கள் மடிவதோ தினம்தினம்உன் நாவது உண்ணா நாளதுவோ புகழாரத் தேடலின் ஓர் நாளதுவோ உன் நாவது உண்ணா நாளேதுவோ மக்கள் உண்ண போராடும் நாளதுவோ- சிந்தியா ரகுநாதன்...
இயற்கை அன்னை

இயற்கை அன்னை

கவிதை, படைப்புகள்
 விரி கடலும் தொடு வானமும், வானில் தவழும் வண்ண மேகமும், மேகத்தினூடே மின்னும் சூரிய, சந்திர விண்மீன்களும் தந்தாள்!பச்சை கம்பள புல்வெளிகளும், பனிமூடிய மலை முகடுகளும், மலை முகட்டினின்று பொன் வெள்ளி தகடென வழியும் அருவிகளும் தந்தாள்!கனிம வளங்களும், அடர் கானகமும் தந்து, உயிர்க்கு அமிர்தமாம் மழையும் மாநதிகளும் தந்தாள்!பசிப்பிணி போக்கும் அருங்கனிகளும், இன்ன பிறவும் தந்தாள்வனப்பு மிகு வண்ண மலர்களும் தந்து கூறினால் இயற்கை அன்னை என் செவியில், மானுடனே இவையாவும் உனக்கு மட்டும் உரியதன்று, உன்னுடன் புவியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும், இனி வாழப்போகும் அணைத்து உயிர்களுக்கும் என்று!(நோ.. நோ.. எனக்கு கவிதைலாம் எழுத வராது. நம்புங்க. இது என் மனைவியின் அம்மா எழுதியது)- இரகுராமன்...
சுமை தாங்கி

சுமை தாங்கி

கவிதை, படைப்புகள்
சிறுவயது முதல் எங்கள் தலையிலே சுமை அலை பாயும் கூந்தலாக..வயதுக்கு வந்தவுடன் உடலியல் மாற்றங்களின் சுமை பொங்கி வரும் இளமையாக..கணவனைக் கைப்பிடித்ததும் வயிற்றிலே சுமை தாய்மை என்னும் கருவாக..பெற்று இறக்கியதும் குழந்தைகளின் தொல்லை அன்புச் சுமையாக..தள்ளாடும் முதுமையிலும் நெஞ்சிலே சுமை மனக்கவலைகளாக..நாங்கள் இன்னும் சபிக்கப்பட்ட உயிரினமாய் பூமித்தாய்க்குச் சுமையாக.- தமிழ் ப்ரியா...