
தனது தயாரிப்பு நிறுவனமான ‘லோன் வொல்ஃப் (Lone wolf)’ என்கிற தயாரிப்பு நிறுவனத்துக்குக்கு, இயக்குநர் மிஷ்கின் இயக்கி நடித்து வரும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்பது எல்லோரும் அறிந்த விஷயமே! வழக்கு எண்: 18/9 இல் நாயகனாக நடித்த ஸ்ரீ, ஆட்டுக்குட்டி குணம் கொண்ட கதாபாத்திரத்திலும், மிஷ்கின் ஓநாயின் குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் டீசர்‘ சமீபத்தில் வெளியானது. அதில் ஓடும் ட்ரெயினில் இருந்து மிஷ்கின் குதிப்பது போலொரு காட்சி வருகிறது.

இது பற்றி இப்படத்தின் ஃபைட் மாஸ்டர் ‘பில்லா’ ஜகன், ”ரயில் வேகம் காரணமாகவும் அதன் தண்டவாளத்தை ஒட்டி நிறைய தூண்களும் கம்பங்களும் இருந்ததால் இக்காட்சியை டூப் வைத்து செய்து விடலாம் என நினைத்தேன். ஆனால் மிஷ்கினோ ‘தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இதை நான் தான் பண்ணுவேன்’ என பிடிவாதமாகக் கூறிவிட்டார். அவருக்கு டூப் போடுவதிலும், சட்டைக்கு பின் கயிறு பயன்படுத்துவதிலும், கிரீன் மேட்டிலோ கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாகவோ இதனை எடுப்பதில் உடன்பாடில்லை..இது மட்டுமில்லாமல் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் ‘டேக்’ குக்கு போய்விட்டார். முதல் டேக் திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் ஒரே டேக் குக்கு போய் இந்த காட்சியை வெற்றிகரமாக எடுத்து முடித்தார். இந்தக் காட்சி மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிஷ்கின் அவர்களது உழைப்பைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நான் தலை வணங்குகிறேன்.இவருடன் பணிபுரிவதை நான் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த அளவும் எனக்கு சந்தேகம் இல்லை” என்கிறார்.