அந்த காலத்தில்
அவள் பார்வைக்காகவே
உயிர் வாழ்ந்தேன்
நம்பவில்லை ஆனாலும் அப்படி
நடக்கும் என்ற நிரந்தரமில்லா நம்பிக்கை சகவாசியை
கட்டாயப்படுத்தி உடன்வசிக்க சொன்னேன்.
பிற்பாடு உறுதிசெய்தால்
சிரிப்பு என்ற ஆயுதத்தாலும்
ஒன்றாக சேர்த்தென்னை வீழ்த்தி
இந்த நிகழ்காலத்தில்
அவளே மறுபடியும் என்னை சிதிலமாக்குகிறாள்
விஷம்கொட்டும் பேச்சு
வேண்டா வெறுப்பு பார்வை
ஒவ்வாத கசக்கும் மருந்தாய் உதட்டசைவு
ஒற்றையிலக்கத்தின் முதல்எண் தடவை
என்னுடய இறக்கும் இந்தகாலம்
அவளுக்கு புதியவனொருவனுடன்
நல்ல தொடக்கம் தந்திருக்க
நான் என்ற ஒரு ஆள்
நடுவில் நிற்பது
போ என்றொரு அவள் வார்த்தைகாக
மறக்காத ஆசை
ஒரே ஒருமுறையாவது பார்ப்பாள்
உன்னிடமிருந்து விடைபெறும் முன்பு
என கண்ணுக்கு ஆறுதல் சொல்லி
கையால் துடைக்கிறது
அதற்காகத்தான் காத்திருக்கிறது
எதற்கும் உதவாத
என் உடம்புக் கூடு
– சே.ராஜப்ரியன்