Shadow

கவிதை

ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு – சிறப்பைக் கூறும் ”மகா கவிதை”க்கு பெருந்தமிழ் விருது

ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு – சிறப்பைக் கூறும் ”மகா கவிதை”க்கு பெருந்தமிழ் விருது

இது புதிது, கவிதை, படைப்புகள்
கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றனகவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன.முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு - சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெருங்கவிதை நூல் மகா கவிதை. அது சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது என்று மலேசிய இந்தியக் காங்கிரஸின் தேசியத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் இ...
நான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து

நான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து

கவிதை
வயக்காட்டிற்கும் வீட்டிற்கும் எனக்கு ஒரே முற்றம் தான்.. வாசல் திறந்தால் காற்று காதல் கீற்று பாடும்.. ஜன்னல் வழியே நெற்கதிர்கள் முத்தம் கொடுத்து பேசும்..அப்பாக்கும் அம்மாக்கும் வயக்காடு தான் சாமி முள்ளு கிழித்தாலும் பாம்பு முத்தமிட்டாலும் செருப்பு போட்டே பாத்ததில்ல..புண்ணாக்கும் மணக்கும்னு தெரிஞ்சவங்களுக்கு கணக்கும் கைக்கொடுக்கும்னு தெரியாம போச்சு..நாலு மூட்ட நெல்ல சந்தையில கணக்கா விக்க நாலு எழுத்து படிக்க தான் என்ன வைக்க பள்ளிக்கூடம் ஒண்ணு சேந்து நானும் படிக்க..கிடுகிடுனு காலம் போக கடகடனு நானும் படிக்க அரசு தேர்வும் பக்கத்துல வந்து நிக்க ஓவென அப்பா அம்மா கதறல் கேட்க என்னவோ ஏதோவென நானும் பாக்கஏதோ எட்டுவழி சாலையாம் இருமாதம் தான் வேளையாம் எங்கள் சோலை இனியாகும் பாலையாம் சிம்மம் போல் சினம் கொண்டேன் ஆயுதம் எடுத்தேன்.. வேறெ...
ஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்

ஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்

கவிதை, படைப்புகள்
கம்பிகளில் தொத்திக் கொண்டிருந்த பாடல்கள் ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கின கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு நான் யார் என்பதற்கான ஒரு வார்த்தையின் பிறப்பை செவிமடுக்க ஆரம்பித்தேன். பளீச்சென்ற கிளியைப் பிடிக்கத் திறந்தே இருக்கும் கூண்டுகளைப்போல என் கண்களை வைத்துக் கொண்டு எனக்குள் இருக்கும் உலகைப் பிடிக்க நடை பயில்கிறேன் மூன்றடிகள் முன்னோக்கி மூன்றடிகள் பின்னோக்கி திரும்பத் திரும்ப நடக்கிறேன். என் பாதையினால் உலகைச் சுற்ற விழைகிறேன். சுற்றிச்சுற்றி வருகிறேன் எடையற்று மேலெழும்பி கீழே விழுகிறேன். அம்மாவின் திரைச்சீலைகளைப் போல் மேகங்கள் ஈரமாகவும் மென்மையாகவும் உள்ளன. என் வாயில் ஒரு புளிப்புச் சுவை உள்ளது படுக்கைக்கு அருகிருக்கும் ஒரு விளக்கு போல நிற்கிறேன் இதமான கைகளின் வன்முறையான தொடுதலின் போதோ கூர்மையாக நோக்கும் அன்பான பார்வையினாலோ ஒரு துப்பாக்கி பின்நகர்வது போல் பின்னிடுகிறேன...
உண்ணாவிரதம் – உன் நா விரதம்

உண்ணாவிரதம் – உன் நா விரதம்

கவிதை, படைப்புகள்
அரசியல் வாணியமாக்கிய விடாணி உருவலும் உறுவலால் உருகியது வரி வாரியம் வறமிளைக்கவோ மோறையும் வாறு இழந்ததுவேண்டியன பலவும் பட்டியலில் உணவுமில்லா பெரும் பந்தலில் தொண்டர்கள் யாவரும் பட்டினியில் நீயோ பொருளீட்டும் இச்சையினால்உண்ணாதிருக்கும் சில தினம் மருத்துவமோ தானோ அனுதினம் விவசாயி வாழ்வுமோர் புதினம் பொதுமக்கள் மடிவதோ தினம்தினம்உன் நாவது உண்ணா நாளதுவோ புகழாரத் தேடலின் ஓர் நாளதுவோ உன் நாவது உண்ணா நாளேதுவோ மக்கள் உண்ண போராடும் நாளதுவோ- சிந்தியா ரகுநாதன்...
இயற்கை அன்னை

இயற்கை அன்னை

கவிதை, படைப்புகள்
 விரி கடலும் தொடு வானமும், வானில் தவழும் வண்ண மேகமும், மேகத்தினூடே மின்னும் சூரிய, சந்திர விண்மீன்களும் தந்தாள்!பச்சை கம்பள புல்வெளிகளும், பனிமூடிய மலை முகடுகளும், மலை முகட்டினின்று பொன் வெள்ளி தகடென வழியும் அருவிகளும் தந்தாள்!கனிம வளங்களும், அடர் கானகமும் தந்து, உயிர்க்கு அமிர்தமாம் மழையும் மாநதிகளும் தந்தாள்!பசிப்பிணி போக்கும் அருங்கனிகளும், இன்ன பிறவும் தந்தாள்வனப்பு மிகு வண்ண மலர்களும் தந்து கூறினால் இயற்கை அன்னை என் செவியில், மானுடனே இவையாவும் உனக்கு மட்டும் உரியதன்று, உன்னுடன் புவியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும், இனி வாழப்போகும் அணைத்து உயிர்களுக்கும் என்று!(நோ.. நோ.. எனக்கு கவிதைலாம் எழுத வராது. நம்புங்க. இது என் மனைவியின் அம்மா எழுதியது)- இரகுராமன்...
சுமை தாங்கி

சுமை தாங்கி

கவிதை, படைப்புகள்
சிறுவயது முதல் எங்கள் தலையிலே சுமை அலை பாயும் கூந்தலாக..வயதுக்கு வந்தவுடன் உடலியல் மாற்றங்களின் சுமை பொங்கி வரும் இளமையாக..கணவனைக் கைப்பிடித்ததும் வயிற்றிலே சுமை தாய்மை என்னும் கருவாக..பெற்று இறக்கியதும் குழந்தைகளின் தொல்லை அன்புச் சுமையாக..தள்ளாடும் முதுமையிலும் நெஞ்சிலே சுமை மனக்கவலைகளாக..நாங்கள் இன்னும் சபிக்கப்பட்ட உயிரினமாய் பூமித்தாய்க்குச் சுமையாக.- தமிழ் ப்ரியா...
உயிரோடு இருங்கள்

உயிரோடு இருங்கள்

கவிதை, படைப்புகள்
என்னது? ஊருக்கு ரோடு கேட்டு உண்ணாவிரதமா?இட ஒதுக்கீடு கேட்டு நடைப் பயணமா?சேற்றில் மிதக்கும் இந்த சேரிக்குள் நடப்பதா? என்னால் முடியாது!உங்கள் வயிறு எரிந்தால் போதாதா? தெருவிளக்கும் எரியணுமா?தண்ணீர் இல்லை என்கிறீர்கள் அப்படி என்றால் கண்ணீர் ஏது?இலஞ்சம் வாங்கினேன் என்கிறீர்கள் நீரூபிக்க முடிந்ததா?என்ன வயதாகிவிட்டது என்னைப் போய் உண்மை பேசச் சொல்கீறீர்கள்தூரமாய் நில்லுங்கள் தொட்டுத் தொட்டு 'காரை' அழுக்காக்கி விட்டீர்கள்!நீங்கள் சிரித்தாலும் பரவாயில்லை அழுதாலும் பரவாயில்லை உயிரோடு இருங்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டும்!- தமிழ் ப்ரியா...
மன்னிப்பாயா…???

மன்னிப்பாயா…???

கவிதை, படைப்புகள்
பத்து வருடங்களுக்கு முன் கலைந்த சோனியாவின் குங்கும பொட்டா இன்று ஆறு போல் ஓடுகிறது எம் ஈழத்தில் ...!!! நாம் என்று இருக்க... இடமொன்று இல்லையடா உனக்கு...??? கைதியாய் ஈழதிலும் அகதியாய் பிற நாட்டிலும் வாழ்வதா உன் விதி விலக்கு...??? நாடு ஒன்று இருந்தும் அண்டை நாட்டை கைப்பற்ற துடிக்கும் பாகிஸ்தானியர்களுடனா உன்னை தீவிரவாதி என்று துலாபாரம் செய்வது ...??? கோழையாய் போன தமிழனை நம்பி ஈனமாய் போன ஈழ தமிழ் மண்ணே....!!!!                  - மன்னித்து விடு என்னை...!!!!- சார்லி கவி...
நான் பைத்தியம் ஆன கதை

நான் பைத்தியம் ஆன கதை

கவிதை, படைப்புகள்
சந்தைக்கு போன அண்ணன் சாயங்காலம் வரும்போது சகதியோடு வந்து நின்றான் ஏனிந்த கோலமென்று இடைமறித்து கேட்கையில் இதுதான் கட்சி கொள்கை என்றான்அறுவடைக்கு போன அப்பா அரைநாளில் திரும்பி வந்து திருவோட்டை கையில் தந்தார் சோறு போட்ட நிலமெல்லாம் கூறுபட்டு மனையாச்சி ஓடுதான் மீதமென்றார்அம்மாவின் வளையலை அடகு வைத்த காசில் கல்லூரி போன தம்பி கண்ணிரண்டும் குருடாகி வாசலில் வந்து விழுந்தான் கவர்ந்த நடிகருக்கு கற்பூரம் காட்டும்போது கண்களை சுட்டதென்றான்ஆசைக் கனவுகளை அள்ளி சுமந்தப்படி பள்ளிக் கூடம் போன தங்கை கூடாததை படித்து விட்டு கருகலைக்க காசு கேட்டாள்அப்பாவின் முதுகில் ஆயிரம் சுமையேற கணவன் வீடு போன அக்கா குடிகார புருஷனிடம் விடுதலை வாங்கித் தாவென்றாள்மலையேறி படியேறி மண்ணில் உருண்டு புரண்டு கடுந்தவம் இருந்து பெற்ற பி...
காதல் செய்வீர்!!

காதல் செய்வீர்!!

கவிதை, படைப்புகள்
அன்பு என்பார் காதல் என்பார் ஆனந்தம் கொண்டே உவகை உறுவார் - பின் அல்லல் என்பார் கவலை என்பார் ஆத்திரம் கொண்டே அழுது தீர்ப்பார்.கனவு என்பார் கவிதை என்பார் கடல் நீரும் இனிக்குது என்பார் - பின் காயம் என்பார் கசக்குது என்பார் கடுப்பில் நொந்து வலிக்குது என்பார்.காம இச்சையில் கண்களும் இழப்பார் கண்டதும் வந்ததோ காதலே என்பார் - சிறிதும் தன்னை அறியவோ முயற்சியும் பேணார் தவறில் உழன்றேதம் கொள்கையும் மறப்பார்.மையலில் மயங்கி நெஞ்சம் மகிழ்வார் மன்மத எண்ணமே உன்னதம் என்பார் - பின் ஓர்வழிக் காதலில் விழுந்து புரண்டு வையம் பொய்யென வருந்திப் புலம்புவார்.அழுது தீர்க்காமல், கொள்கை மறக்காமல் வருந்தி புலம்பாமல், நொந்து வேகாமல் - உலகம் அன்புமயமாய் மலரவே காதல் செய்வீர் அனைத்து உயிரினையும் காதல் செய்வீர்.- தினேஷ் ராம்...
கவிதை

கவிதை

கவிதை, படைப்புகள்
உன்னால் என்னை எழுதுகிறேன் என்னால் உன்னை வாசிப்பாயா "காதல்"உனக்குத் தெரியாது உன்னுடம்பில் இன்னொரு உயிராய் நானிருக்கிறேன் பாரம் தாங்கமாட்டாய் என்பதற்காக உருவமற்று உன்னோடு மட்டுமே வசிக்கும் 'உன் நான்'- சே.ராஜப்ரியன்
இயல்பிழந்த நிலை

இயல்பிழந்த நிலை

கவிதை, படைப்புகள்
இயல்பிழந்த நிலையில் இருக்கிறேன் உன்னோடு என்னை சேர்த்த காதலால்இயல்பிழந்த நிலையில் இருக்கிறேன் நடிக்க வேண்டிதானிருக்கிறது அம்மாவின் பாசத்திலிருந்து நண்பர்களின் ஆறுதலிருந்து மற்றவர்களின் அனுதாபத்திலிருந்து அவளின் ஏளன பார்வையிலிருந்து மறைவாய் அழுதுதீர்த்த கண்ணீரிலிருந்து நம்பிக்கை துரோகிகளின் போலிசிரிப்பிலிருந்து ஊருக்கு பேசிவிட்டு உண்மையில் நடக்காத உபதேசவான்களின் அறிவுரையிலிருந்து தப்பிக்கஎப்பொழுதும் போலவே சிரிக்கிறேன் பேசுகிறேன் எல்லாமும் செய்கிறேன் கண்களை வற்ற செய்து- சே.ராஜப்ரியன்...
என் கொலை

என் கொலை

கவிதை, படைப்புகள்
என்னை நானே கொலை செய்கிறேன் என்னை விரும்பாதவளை நான் நேசிப்பதால்தற்கொலை யாகாது படிமுறைகள் பலவுண்டு இந்த என்கொலைக்குஆகவேதான் இப்பொழுதும் அவள் மட்டும் கற்பனையில் அருகாமையில் இருக்கிறாள் சாட்சியாக குற்றவாளி யார் எனச்சொல்ல- சே.ராஜப்ரியன்