Shadow

கோடையைக் குதூகலமாக்க வரும் வைகைப்புயல்

எலி சதா வடிவேலு

எலி படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாப்பாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்கச் சம்மதித்துள்ளார் நடிகை சதா. சதாவின் நகைச்சுவைக் காட்சிகள் புது அனுபவம் தரும்.

1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ் குமார் தயாரிக்கிறார்.பின்னி மில் வளாகத்தில் அமைக்கப் பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரம்மாண்டமான வீடுகளின் உள்க ட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிக்கணக்கில் கலை இயக்குநர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மேலும் பல கோடி ரூபாய்க்கும் செலவில் நடன வீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாகப் புகழ் பெற்ற மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம்புகழ் நடன இயக்குநர் தாரா அவர்களின் நடன அமைப்பில் பாடல் படமாக்கப்பட்டது.

பூனைகள் துரத்தும்போது எலி எப்படிச் சமாளிக்குமோ, அதே போன்று சூப்பர் சுப்பராயன் சண்டைப்பயிற்சியில், வைகைப்புயல் வடிவேலு எலியாக தனது நடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறார். இந்த நகைச்சுவைச் சண்டைக் காட்சி படத்தின் சிறப்பம்சமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் எலி ஏப்ரல் இறுதியில் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று மே மாதம் திரைக்கு வருகிறது.

எலி குழந்தைகளுக்கு கோடை விருந்தாக அமையுமென நம்பலாம்.