ஸ்பெக்டர் படத்துடன் பாயிண்ட் பிரேக் படத்தின் ட்ரெயிலரைப் பெரிய அளவில் வெளியிட்டுள்ளனர் PVR பிக்சர்ஸ். நவம்பர் 20 ஆம் தேதி முதல். இந்தியாவெங்கும் 500 திரையரங்குகளில் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஹாலிவுட் படத்தின் ட்ரெயிலர், இது போன்று அதிக திரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
யூட்டா எனும் இளம் FBI அதிகாரி, குற்றங்களை அதீத சாகசத்துடன் இணைத்துச் செய்யும் விளையாட்டுக் குழுவைத் தேடிச் செல்வது தான் படத்தின் கதை.
இதுவரை வந்த சாகசப் படங்கள் அனைத்தையும் விட அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. கடலலையில் நீர் சறுக்கல், பறவை போல் உடையணிந்து அந்தரத்தில் மிதத்தல், பனி மலைச் சரிவுகளில் சறுக்குதல், பாறைகளில் கருவிகள் ஏதுமின்றி வெறும் கைகளுடன் ஏறுதல், அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் என படம் முழுவதுமே அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்தான்!
கேத்ரீன் பிக்லோ இயக்கத்தில், கீனு ரீவ்ஸ் நடித்து 1991இல் வெளிவந்த ‘பாயிண்ட் ப்ரேக்’ படத்தின் ரீமேக் தான் இது. எரிக்சன் கோர் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். ஜனவரி 1, 2016 அன்று இப்படத்தை PVR பிக்சர்ஸ் வெளியிடவுள்ளனர்.