Shadow

திருமூலர் நதியா என்நண்பன்

தலை முடி நரைக்கிறதே என கவலைப்படாதவர் எவரேனும் உள்ளனரா? என்நண்பனுக்கும் அதே கவலை தான். அதுவும் சாதாரண கவலை இல்லை. மிகப் பெரும்கவலை. திருமணம் வேறு அவனுக்கு ஆகவில்லை. இப்ப புரியும் என்று நினைக்கிறேன்அவனது கவலையின் அளவு.

பிறந்தா ஒரு நாள் சாக தான் போறோம். அந்த மாதிரி தலையும் நரைக்க தான்போகுது. தலை நரைச்சுடுச்சு என்று எனக்கு எந்த கவலையும் இல்ல. எங்க அம்மாவநினைச்சா தான் கவலையா இருக்கு. ஏன்னா எங்க அம்மாவுக்கு அவங்க அம்மான்னாஉசுரு. அவங்களுக்கு என் கல்யாணத்த பார்க்கனுமாம். ம்ம்.. எங்க பாட்டியோடஆசைய நிறைவேத்த முடியலையேன்னு அவங்க அழ.. அத பார்த்து நான் கண் கலங்க“என்று எனக்கு கண் கலங்கியும் காண்பித்தான். அவனை திருப்திப்படுத்த என்னால்அப்பொழுது அவனுக்கு கண் கலங்கி காட்ட முடியவில்லை.  ஆனால் அவனது திருமணம்நரையால் தடங்கல் ஆகிறது என்பதை இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவது போல்சொல்லி உயிரெடுக்கிறான் என நினைத்தால், அவன் கொடுக்கும் ரோதனையை நினைத்துகண் சில சமயம் கலங்குகிறது.

இவனது ரோதனையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என யோசித்தேன். அவனுக்குஆங்கில மருத்துவத்தில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. சாயம் பூசி முடியைகருமையாக்கும் தற்காலிக தீர்வை செய்பவனாக இருந்தால் இன்று அவனது மழலைசெல்வம் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருக்கும்.

தினமும் நெல்லிக்காய் உண்டு வந்தால் இள நரை மறையும் என்ற சித்த மருத்துவக்குறிப்பை கேள்விப்பட்டு அவனிடம் சொன்னேன். முக மலர்ச்சியோடு போனவன்மீண்டும் நரைத்த முடி மற்றும் முறைத்த முகத்தோடு மீண்டும் வந்தான். ஒருவாரமாக ஒரு முடியில் கூட நரை குறையவில்லையாம். மேலும் எட்டு முடியில் நரைவந்ததோடு முன்பே நரை வந்த முடிகள் மேலும் வெள்ளை அடித்தது போல் ஆகிவிட்டதாம். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் தான் சித்த மருத்துவம் பலிக்கும்என்று சொல்லிப் பார்த்தேன். அரை மூட்டை நெல்லிக்காய்களை என் வீட்டில்இறக்கி விட்டு, ஒன்றும் சொல்லாமலேயே சென்று விட்டான். ஒரு வாரத்திற்குபிறகு மெதுவாக விசாரித்து பார்த்தேன். அவன் சளைக்காமல் இதற்கும் ஒரு கதைவைத்திருக்கிறான். முடி நரைத்தல் என்பது மிகப் பெரிய பிரச்சனையாம். அதற்குஇத்தனை சிறிய தீர்வா என நெல்லிக்காய் மீது நம்பிக்கை இழந்து விட்டனாம்.பிரச்சனை பெரிது என்றால் தீர்வும் பெரிதாய் இருக்கனும் எனஎதிர்பார்க்கிறான்.

சரி இவனுக்கு நம்பிக்கை ஏற்படுத்துற மாதிரி ஏதாவது பெரிதாக சொல்ல தேடும்போழுது தான் அதை படித்தேன். அதுவும் சின்னஞ்சிறு தீர்வு தான். ஆனால்வித்தியாசமாய், புதுசாய் இருந்தது. அவனுக்கும் நான் சொல்லப் போவதில்எல்லாம் நம்பிக்கை கொஞ்சம் இருந்தது. ஆனால் எப்படிச் சொல்வது.. என்னன்னுசொல்வது.

“டாஸ்மாக்” உலகின் மிக செளகரியமான இடம். ஒன்றைப் பற்றி பேச வேண்டுமெனில்நமது வேலையை சுலபமாக்கும் இடம். முதல் சுற்று முடிந்தவுடன், “உனக்குதிருமூலர் தெரியுமா?” என்றேன்.

உடனே எழுந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு, “அவர் பெரிய சித்தர்” என்றுஉட்கார்ந்தான். அடுத்து நான் பேசலாம் என வாய் திறக்கும் பொழுது, “எங்கமணியூர் தாத்தா இல்ல. நாம காலேஜ் படிக்கும் பொழுது செத்தாரே, நாம கூடபோயிட்டு வந்தோமேடா.. அவரு திருமூலர் எழுதின திருமந்திரத்த தலைகீழாஒப்பிப்பாரு. அவங்க அப்பாவோட பூஜை அறையில பதினெட்டு சித்தர் சிலை வச்சுவழிபடுவாராம். அகத்தியருக்கு அப்புறம் ரொம்ப சக்தி வாய்ந்த சித்தர்திருமூலர் தான் தெரியுமில்ல..” என்று அவன் பேசிக் கொண்டே போனான். இன்னும்இரண்டு சுற்று முடிந்தப்பிறகு தான் நம்மை பேச விடுவான் என புரிந்தது.

ஒருவழியாக நான் பேசுவதை கேட்கும் அளவிற்கு அவனுக்கு போதை ஏறியது.பையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்தேன். “திருமூலர் என்ன தெரியுமாசொல்லியிருக்காரு?” என புத்தகத்தை பார்த்துக் கொண்டே கேட்டேன். ‘“ஒடம்பவளர்த்தா உயிர் வளரும்” என்றான் மீன்டும் கன்னத்தில் போட்டுக் கொண்டே.மீண்டும் இன்னொரு சுற்றா என பயந்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அவன் மேசை மீது அப்படியே சாய்ந்து விட்டான். அவ்வளவு தான்.. இன்னைக்குசொல்ல முடியாது என புரிந்தது.

ஏன்டா என்னை கோவிலுக்கு எல்லாம் கூட்டிட்டு வர்ற? பாரு எல்லாம் பொண்ணுங்களும் என தலையையே பார்க்கிறாங்க.

இத படியேன்” என்று புத்தகத்தைக் கொடுத்தேன்.
நீயே படி. நானும் கேட்கிறேன்” என்று அவன் தலையைப் பார்த்துக் கொண்ட போன பெண்ணை பார்த்து தலைக் குனிந்தான்.

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே
“.

அவன் என்னைப் பார்த்து விட்டு மீண்டும் தலை குனிந்துக் கொண்டான்.

நூறுமிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயிர் ஆகுமே
“.

வாடாப் போலாம்” என்றான் கோபமாக.

இந்த பாட்டுல திருமூலர் நரைமுடியை கருமையாக்குகிற ரகசியத்த சொல்லியிருக்காருடா” என்றேன்.

அவன் கண்கள் மலர்ந்தது. “இதுக்கு என்னடா அர்த்தம்?” என்று கேட்டான்.

நீயே படியேன்” என்று கொடுத்தேன்.

சிவநீர், அமரி, அமுரி என்று வைத்திய நூலிலும், சித்தர் பாடல்களிலும்குறிப்பிடுவது சிறுநீர் ஆகும். அவர் அவர் விடும் காலை சிறுநீரில் முதல்பாதியில் பித்தமும், கடைசிப் பகுதியில் சாரம் அற்ற நிலையும் இருப்பதால்,நடுப்பகுதிச் சிறுநீரையே பருகுதல் வேண்டும். இதன் அருமை பெருமை தெரிந்துஉச்சியில் அப்பினால், நரை மயிர் மாறும். அதற்கு மாறாகக் கறுமயிர்தோன்றும்” என்று மெதுவாக படித்து விட்டு என் முகத்தைப் பார்த்தான்.

நான் அவனை சமாதானப்படுத்துவதற்காக அசட்டுத் தனமாக சிரித்தேன். அவன்எழுந்தான். நானும் எழுந்தேன். இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்தோம்.கோவில் கோபுரத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு, “நான் கூட இதப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன். மொரார்ஜி தேசாய் அப்புறம் நம்ம நதியாவும்கூட…” என அவன் கதையை ஆரம்பித்தான்.