Shadow

நாடோடிகள் விமர்சனம்

www.okgot.com

சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமார் உட்பட நடிகர்கள் நடித்துள்ளனர் இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவியாளாராக இருந்தவர் படத்திலும் அது தெரிகிறது.

நண்பனை அவன் காதலியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் நண்பர்கள் 3 பேர் தன் வாழ்க்கையே இழக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சலிப்பால் காதலர்கள் இருவரும் பிரிகின்றனர் அதோடு நண்பர்களையும் அவமானப்படுத்துகின்றனர் இதில் விரக்தியடையும் நண்பர்கள் காதலர்களை பழிவாங்க நினைக்கின்றனர் இறுதியில் காதலர்கள் திருந்தினார்களா, கொல்லப்பட்டார்களா? என்பதுதான் படத்தின் கதை. அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் (குறிப்பாக அபினயா) . ஒளிப்பதிவு, பாடல்கள் நன்றாக உள்ளன.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் சமுத்திரகனி காதல் திருமணங்கள் தோல்வி அடையும் பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணம் வெற்றி பெறும் என்று சொல்ல வருகிறாரா? இது பெற்றோர்களை திருப்திபடுத்துவதற்காகவா? என்றும் தெரியவில்லை.
பெற்றோர்களின் பார்வையில் கதையை மாற்றுகோணத்தில் சொல்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் மறைமுகமாக சாதி, சொத்து ஆகியவற்றை காப்பற்றும் Arranged Marriage- ஐ ஆதரிக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பார்வையில் புதுமையை புகுத்தியவர், கருத்திலும் புதுமையை புகுத்த தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.

Item Number பாடல் ஒன்றை போகிற போக்கில் எடுத்துவிடுகிறார் திணிப்பு. மிகப்பெரிய மில் அதிபர் தன் மகளை காணவில்லை என்றால் போலீசிடமா கெஞ்சிக்கொண்டிருப்பார்?அ நியாயத்திற்கு அவரை அப்பாவியாக காட்டியது அவரை நல்லவர் என்று பார்ப்பவர்கள் உணரவேண்டும் என்பதற்கா? தெரியவில்லை சில Logic சறுக்கல்கள் இருந்தாலும் வழக்கமான மசாலா பாணியில் இருந்து மாற்று கருத்தை புதியமுறையில் சொன்னதற்கு சமுத்திரகனியை பாராட்டாமல் இருக்க முடியாது அதேபோல் காதலென்றாலே அதை சேர்த்துதான் வைக்கவேண்டும் விமர்சனம் செய்யக்கூடாது எனும் நவீன ஷாஜகானுக்கு ஒரு குட்டு வைத்துள்ளார் இயக்குனர்.

மசாலா நெடி, Punch வசனங்கள், ஒல்லி Hero பத்துப்பேரை புரட்டி புரட்டி அடிப்பது, இரட்டை அர்த்த காமெடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட படங்களின் வெற்றி டானிக் என்றே சொல்ல வேண்டும்.
சமுத்திரகனி, சசிகுமார் போன்றோர்களிடம் தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் நிறைய எதிர்பார்கிறார்கள்.

Leave a Reply