32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

Dinesh R சேலம் Published: 16/05/2026 1 நிமிட வாசிப்பு Updated: 18/05/2026 சினிமா
எழுத்து அளவு:

நாயகியைக் கண்டதும் சட்டெனக் காதல் கொள்ளும் நாயகன், ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ எனக் கேட்டதும், நாயகியும் சட்டெனச் சம்மதம் தெரிவிக்கிறார். டக்கெனத் திருமணம் செய்து பட்டென வாழ்க்கையைத் தொடங்கினால், சட்டென அவர்கள் வாழ்க்கையில் வானிலை மாறி பிரச்சனை தொடங்குகிறது. அவ்வானிலை மாற்றத்தில் இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் முடிவு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மூன் ஸ்டே எனும் பெயரில் பல ஹோட்டல்கள் வைத்துள்ள கருடா ராம், புதுமணத் தம்பதிகளுக்குத் தங்கள் ஹோட்டலில் தங்குவதற்குச் சலுகை தருகிறார். அறைகளில் கேமரா பொருத்தி, தம்பதியின் அந்தரங்கமான தருணங்களை வீடியோவாக்கிப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

சின்ன பகவதி சிண்ட்ரோமில் இருந்து வெளியில் வராத ஜெய்யின் மேனரிசங்களைப் பார்த்துப் பனையூருக்குச் சென்று இளைய தளபதியை எப்படியாவது மீண்டும் நடிக்க அழைத்து வந்துவிட வேண்டுமெனப் படத்தில் கலாய்த்துக் கொண்டே இருக்கிறார் யோகிபாபு. இயக்குநரும் சாதுரியமாக, ‘இப்படத்தில் நீங்க விஜய் ஃபேன் ஆக வர்றீஙக’ என்று சட்டென சிண்ட்ரோமிற்கு லாஜிக் தீர்வு கண்டடைந்துள்ளார்.

இரண்டு மணி நேரப் படத்தில், எந்தக் காட்சிகளும் நின்று நிறைவு பெறாமல் சட்சட்டென அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்தவண்ணம் உள்ளன. கதையின் முடிவில் கன்வின்ஸாகி, கதாபாத்திர உருவாக்கத்திலோ, திரைக்கதையாக்கத்திலோ மெனக்கெடாமல் விட்டுள்ளார் அறிமுக இயக்குநர் பாபு விஜய். அதனால் நாயகியாக நடித்துள்ள மீனாட்சி கோவிந்தராஜன் முதலிய பிரதான கதாபாத்திரம் கூட மனதில் நிற்காமல், கதையின் ஓட்டத்தில் சட்டென அடித்துச் செல்லப்படுகிறார். ஒரு காட்சியாக (Scene) உருபெறாமல், fastcut-இல் சட்டென அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.