நானும் அவளும்
காதலித்தோம்.
நானும் அவளும்
பேசிக்கொள்வோம்.
நானும் அவளும்
ஒரே தட்டில்
உணவு உண்போம்.
நானும் அவளும்
ஒன்றாக
ஒரே படுக்கையில்
துயில் கொள்வோம்.
நானும் அவளும்
எங்கள் உடையை
மாற்றி மாற்றி
உடுத்திக் கொள்வோம்.
நானும் அவளும்
ஒரே இருக்கையில்
இறுக்கமாக
அமர்ந்துக் கொள்வோம்.
நானும் அவளும்
எழுதுகோல் விரல்களால்
காகித கட்டுடலில்
கவிதை எழுதுவோம்.
நானும் அவளும்..
‘நீயும் நானும்
கல்யாணம்
செய்துக் கொள்வோம்’
என பேசினோம்.
நானும் அவளும்
இப்படி எத்தனையோ
ஒன்றாக செய்தோம்.
கல்யாணமும்
செய்துக் கொண்டோம்.
நான் வேறோறொரு அவளை
அவள் வேறொரு அவனை.
எங்கள் திருமணத்திற்கு
வந்து வாழ்த்திய
சாதி, மதம், பணம்
மற்றும்
வாட்டும் நினைவுகள்
என சகலத்திற்கும்
என் நன்றி.
– சே.ராஜப்ரியன்