நிலா வந்து போகிறது
வானம் நட்சத்திரங்களைக் கொட்டி
மீண்டும் பொறுக்கி எடுக்கிறது
சூரியன் தோன்றி மறைகிறது
மழை நனைத்துப் போகிறது
மின்னல் மீண்டும் வானிற்கே போனது
இடி சத்தமிட்டு சாகிறது
பனித்துளி பூத்துக் கரைகிறது
பூக்கள் மலர்ந்து உதிர்கிறது
பலகவிதை எழுந்து விழுகிறது
இசை ஒலித்து ஓய்கிறது
வண்ண விளக்குகள் எரிந்து அணைகிறது
குயில் கூவிச் சோர்கிறது
மயில் ஆடி முடிக்கிறது
அலைகள் கரையைத் தொட்டு
விளையாடி செல்கிறது
இன்னும் என்னென்னவோ நடக்கிறது
எதுவும் முழுமையடையவில்லை
சந்தோஷங்களைப் பெறவில்லை
வீட்டிற்குள்ளே இருக்காதே
வெளியில் வந்து உன் முகம்கட்டு
விவரம் அறியாது
சோகத்திலிருக்கிறது எல்லாம்
என்னைப் போலவே!!
– சே.ராஜப்ரியன்