Shadow

புஷ்பாவின் மூலம் உலக சந்தையில் இந்திய சினிமாவின் மதிப்பைக் கூட்டும் அல்லு அர்ஜூன்

‘புஷ்பா’ படம் மூலம் உலக சந்தையில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்!

பெர்லின் திரைப்பட விழாவில் ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் சிறப்புத் திரையிடலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். அவர் தனது வருகையின் போது சர்வதேச திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் கலந்துரையாடினார்.

ரஷ்யா, அமெரிக்கா, வளைகுடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ‘புஷ்பா தி ரைஸ்’ படம் மகத்தான வெற்றியைப் பெற்றதன் மூலம் இந்தப் படத்தின் புகழ் ஏற்கனவே உயர்ந்துள்ளது. தற்போது பெர்லினில் திரையிடப்பட இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதன் புகழையும் எதிர்பார்ப்பையும் இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2 தி ரூல்’ ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது. அல்லு அர்ஜூன் இப்போது சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவுக்குச் சென்றிருப்பது பார்வையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, வர்த்தக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை படம் மீது உருவாக்கியுள்ளது. ‘புஷ்பா 2 தி ரூல்’ வெளியீட்டிற்கான உற்சாகமும் எதிர்பார்ப்பும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், படத்தின் வெற்றிக்கு இந்தத் திரையிடல் உலகளாவிய அளவில் முக்கியமான தருணமாக மாறியுள்ளது.