Shadow

மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

எங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து படி வீடு எப்படி கட்டுறதுன்னு கருத்து சொல்ல முடியுமா? ஆனா ஒரு கவிஞனா இருந்தா எதுக்கு வேணும்னாலும் கருத்து சொல்லலாம். சாதி பிரச்சினையில இருந்து சாம்பார்ல உப்பு குறைஞ்சா என்ன பண்றதுங்கற வரைக்கும் எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற ஒரே தகுதி.. இந்தக் கவிஞர்களுக்குத்தான் இருக்கு.

அதுனால நீங்களும் கவிஞர் ஆகறீங்க. எப்படி? அதுக்குத்தான் இந்தப்பதிவு.

முதலில் கவிதை எழுதனும்னு தீர்க்கமா ஒரு முடிவு பண்ணுங்க. ஆமா கவிதை எழுதணும்னு முடிவு பண்ணின உடனே, கொலதெய்வம் கூகிளாண்டவரை மனசுல நிறுத்தி அவர்கிட்ட கோரிக்கை வச்சிட்டா.. அவர் அள்ளிக்கோ, அள்ளிக்கோன்னு கொடுத்துருவார்.

உதாரணம் – http://www.poemhunter.com/poems/alone/

இதைப் போல நாலைந்து வெப்சைட்.. ஹைக்கூ கவிதைகள் உள்ள வெப்சைட்ல நமக்கு என்ன வேணுமோ அதை எடுத்து, மறுபடியும் கூகிளாண்டரை கும்பிட்டு ட்ரான்ஸ்லேட்டர்ல குடுத்துட்டா நோகாம மொழிபெயர்த்து குடுத்துருவாரு. அப்புறம் அதுல நம்ம கட்டிங், ஒட்டிங் டெக்னாலஜியை வச்சி குத்து மதிப்பா நமக்கு புரியாத மாதிரி ஒரு உருவம் கொடுத்துட்டா அதான் உலகத்தரம் வாய்ந்த கவிதை.

இப்ப ஒரு சேம்பிள் பார்ப்போம்.

http://russbaleson.hubpages.com/hub/The-Sound-of-Water—Over-200-of-the-best-Haiku இந்த இணைப்பில் இருந்து எடுத்து,..  நம்ம கட்டிங், ஒட்டிங் டெக்னாலஜியை வச்சி உருவாக்கப்பட்ட கவிதைகள்.

waiting for the words
the depth of me in haiku
tell you who I am

வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன்.
எனது ஹைக்கூவின் ஆழம்
நான் யாரென சொல்லும்.

—————————————-

at the ancient pond
a frog plunges into
the sound of water

பழைய குளத்தில்
பாய்ந்தது தவளை
அசைந்தது தண்ணீர்.

—————————————-

sleeping without you
not as much fun as with you
come back to my bed

நீ இல்லாத உறக்கம் 
எப்போதுமே உவப்பாக இல்லை.
வந்துவிடு, என் படுக்கைக்கு!

—————————————-

இப்படியும் கவிதை எழுதி காசும் பார்க்கலாம், கவியரசாகவும் ஆகலாம்.

மனுஷ்யபுத்திரன் இப்படித்தான் எழுதறாரான்னு யாரும் கேட்காதீங்க, அவரை மாதிரி கவிதை எழுதணும்னு நினைக்கறவங்க இப்படித் தொடங்கலாம்.

இவ்ளோவ்தான் தொழில் ரகசியம்.. இதுக்குப் போய் என்னா பில்டப்பு!?

– சிம்ம வாகனி

Leave a Reply